Penbugs
Cinema

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78.

மாணிக்க விநாயகம் இதுவரை பல்வேறு தென்னிந்திய மொழிகளில் கிட்டதட்ட 800 பாடல்களை பாடி உள்ளார். இது தவிர பக்தி பாடல்கள், கிராமியப்பாடல்கள் என 15,000 க்கும் அதிகமான பாடல்களை மாணிக்க விநாயகம் பாடி உள்ளார்.

பாடலோடு மட்டும் இல்லாமல் 2003 ம் ஆண்டு தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

அதிலிருந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மாணிக்க விநாயகம்.

பேரழகன், கிரி, திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், தோழி, வேட்டைக்காரன், பலே பாண்டியா, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மாணிக்க விநாயகம் மறைவிற்கு திரைத்துறையினர் தனது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களும் டிவிட்டரில் தனது இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment