Penbugs
Cinema

மலையாளத்தின் பிரபல நடிகரான நெடுமுடி வேணு காலமானார்

மலையாள திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருந்த நெடுமுடி வேணு இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

இவர் மலையாளம், தமிழ் மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நெடுமுடி வேணு தமிழில் இந்தியன், பொய் சொல்ல போறோம் , அந்நியன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மூன்று முறை தேசிய விருது வென்றுள்ள‌ இவர் கேரள மாநில விருது, பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

இவரது மறைவுக்கு இந்திய திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment