Penbugs
Indian Sports

மெய்யானது மாரியப்பனின் கனவு

தேசியக் கொடியை ஏந்தி சென்றிருக்க வேண்டியது.

பாரா ஒலிம்பிக் துவங்க சில நாட்கள் முன்பு, அவருடைய விமானத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு ‘நெகட்டிவ்’ முடிவு வந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்துதலை கடைபிடிக்கும்படி ஆனது. தேசியக் கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை இழந்தார்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பதால், எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.

1.83மீ-
முதல் முயற்சியிலேயே மிக எளிதாக தாண்டினார் மாரியப்பன்.

1.86மீ-
மாரியப்பன் கடைசி முயற்சியில் தாண்டினார், இந்தியாவின் சரத்குமாரால் தாண்ட முடியாத காரணத்தினால், அவருக்கு வெண்கலம் என முடிவானது.

1.88மீ-
மாரியப்பனால் தாண்ட முடியவில்லை. ஆனால், சாம் க்ரிவ் (Sam Grewe) கடைசி முயற்சியில் தாண்டினார். தங்கமும் வென்றார்.


இன்று டோக்கியோவில் நல்ல மழை. மைதானம் அதிகம் ஈரமாக, மாரியப்பனால் தாண்டுவது கடினமானது.

அவர் ஒரு காலில் காலுறை (socks) அணிவார், அது ஈரமாகிவிட்டக் காரணத்தினால் அவர் தாண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இல்லையெனில் இரண்டாவது முறையாகத் தங்கம் வெல்லும் வாய்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்த முறை வெள்ளியுடன் வீடுத்திரும்பும் அவர், அடுத்த முறை உலக சாதனையுடன் தங்கம்
வெல்வார் என்று நம்பிக்கையுடன்…

இமேஜ்- youtube, scroll.in

Related posts

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்க தொகை – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

மாரியப்பன் ,ரோகித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

Penbugs

Mariyappan Thangavelu– Against all the odds

Penbugs

Mariyappan Thangavelu, Sharad Kumar wins silver, Bronze in high jump

Penbugs

Leave a Comment