Penbugs
Cinema

Rocky Movie Review | ராக்கி | திரைப்பட விமர்சனம்

ரொம்ப நாள் நிலுவையில இருந்து வெளிவந்த ஒரு பழிவாங்கும் கேங்ஸ்டர் படம்… படத்தின் ட்ரைலர் வந்த நாள்ல இருந்து மிகுந்த எதிர்பார்பை ஏற்ப்படுத்துச்சு, அதை பூர்த்தியும் செஞ்சுருக்குனு தான் சொல்லணும்.

படத்தின் கதை #17 வருஷம் ஜெயில் வாழ்க்கையை முடிச்சுட்டு வர ராக்கி, தன்னோட தங்கச்சியை தேடும் போது, பழைய பகை மீண்டும் துரத்தது அதிலிருந்து எப்படி வெளிய வராரு? பகை முடிஞ்சதா? இதை முழுக்க ரத்தமா சொல்லிருக்காரு இயக்குனர்.

படத்துக்கு பெரிய தூண்களாக இருக்கிறார்கள் கதையின் நாயகன் “வசந்த் ரவி”யும் பகையின் நாயகன் “பாரதிராஜாவும்” …career best..

வசந்த் ரவி “தரமணி டு ராக்கி” பெரிய வித்தியாசம் இல்லாத உணர்வு, இருந்தாலும் (ரத்தத்தால்) ஜொலிக்கிறார். பாரதிராஜா தன்னோட சிறு அசைவிலும் அசர வைக்கிறார், தன்னோட மகனின் விரலையே வெட்ட சொல்லும் காட்சியே பெரிய சாட்சி.. தன்ராஜ் ரெட்ரோ ஸ்டைல் வில்லனிசம், மல்லி, நட்ராஜ் சிறப்பு.

இசை தர்புக்கா சிவா மற்றுமொரு பலம் முக்கியமான கட்டதில் elevate செஞ்சது இவரோட பின்னணி இசை தான்.. ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் வைக்கும் ஒவ்வொரு பிரேம்மும் நம்மை கதைக்குள்ளயே கட்டிபோடுது அழகியல் ஓட.

Atrangi Re | Galatta Kalyanam Review

குறிப்பாக 20 நிமிஷம் வரும் non cut ஷாட், பாரதிராஜா building shot என்று மிரள வைக்கிறார், சிறு சிறு பின்னணி வேலை ஆட்களின் உழைப்பும் படத்தில் தெரிகிறது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஒரு பெரிய salute ஒரு பழகிய கதையை வைத்து 2.15 அடுத்தது என்ன என்று யோசிக்கவே வைக்கிறார், non linear ஸ்டோரி சொன்ன விதம் ஒரு குறுநாவல் போலவே அருமையா இருந்தது, அதுக்கு குடுத்த முக்கியத்துவம் கதைக்கும் கொடுத்து இருக்கலாம்.

அஜித்தின் ‘வலிமை’ பட மேக்கிங் வீடியோ வெளியானது

தனக்கான எந்த விஷயத்திலும் சமரசம் செய்யவில்லை, ஆனாலும் வரும் லாங் ஷாட்கள், ரத்தம் காட்சிகளும் இவ்வளவு தேவை தானா? என்றும் நம்மை யோசிக்க வைக்கிறது, பொறுமையையும் சோதிக்கிறது, உலக சினிமா ரசிப்போருக்கு பொருந்தும் என்றாலும் இது தமிழ் சினிமா பழகாத ஒன்று.. இதை சரி செய்து இருந்தால் இன்னும் கொண்டாடப்பட்டிருப்பான் ராக்கி..

பொறுமையில் வெல்வான் ராக்கி!!!

Related posts

Arun Jaitley passes away at 66

Penbugs

Leave a Comment