Penbugs
Cinema

ஜெய் பீம் திரைப்பட விமர்சனம்

நடிகர் மணிகண்டன் மற்றும் சூர்யா பிரகாஷ்ராஜ், கே.மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோரின் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில்,ஷான் ரோல்டன் இசையில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’

கதையாக பார்த்தால் ஒரு சிறிய காவல் நிலையத்திலிருந்து காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கப் போராடும் ஒரு பழங்குடிப் பெண்ணின் போராட்டமே ‘ஜெய் பீம்’ ஆனால் கதை சொன்ன விதத்திலும் ,காவல் துறையின் இருண்ட‌ பக்கங்களையும் , நீதித்துறையின் மீது பாமர மக்களுக்கும் நம்பிக்கை தரும்படியுமான ஒரு படத்தை தந்துள்ளார் இயக்குநர் த‌.செ ஞானவேல்.

கதையின் விமர்சனம் தாண்டி இயக்குனருக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள் முந்தைய படத்திற்கு பிறகு தனது இரண்டாவது படமாக இதை தேர்வு செய்து அதுவும் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு படத்தை எடுக்க முனைந்து இருப்பது அதுவும் முழுக்க முழுக்க டாகுமெண்ட்ரியாக தோன்ற கூடிய கதையை சினிமாவுக்கே உரித்தான பாணியில் தன் சொல்ல வந்த கருத்தை நச்சென்று பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறார்.

படத்தின் பெரிய பிளஸ் அனல் தெறிக்கும் வசனங்கள்

படத்தின் டைட்டில் ஆரம்பிப்பதற்கு முன்னமே சாட்டை சுழற்றி அடிக்க ஆரம்பித்துள்ளார் இயக்குனர்.

நீ என்ன சாதி என்ற கேள்வி கேட்டு படம் துவங்கும் இடமே மனத்தை உறுத்துகிறது.இப்பலாம் யார் சாதி பார்க்கிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் நமக்குள்ளயே கேட்க வைத்துள்ளது ஜெய் பீம் படம்.

  • சட்டம் வலிமையான ஆயுதம், யாரைக் காப்பாத்துறதுக்காக அதைப் பயன்படுத்துறோம்ங்கிறது முக்கியம்”,
  • ஒரு ஆள் மேல ஒரு கேஸ் தான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேஸைப் போட்டு விடுங்க
  • ஒரு உண்மையை ஒத்துக்கிறாங்கன்னா பல உண்மைகளை மறைக்கிறாங்கன்னு அர்த்தம்
  • தப்பு பண்றவங்களுக்கு பதவி, பணம், சாதின்னு நிறைய இருக்கு ஆனால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதானே இருக்கோம்

என பல இடங்களில் வசனங்கள் சிந்திக்கவும் , சுவாரஸ்யமாகவும் உள்ளன.

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதமாக உள்ளது.

படத்தின் இறுதியில் உண்மை சம்பவங்களை தொகுத்து வழங்கியிருப்பது படத்திற்கும் , நீதியரசர் திரு சந்துரு அவர்களுக்கும் சிறப்பு செய்துள்ளது. நீதியரசர் சந்துரு அவர்களின் பணி காலம் கடந்து போற்றத்தக்கது‌.

ஜெய் பீம் இந்த தலைப்பை விட பொருத்தமான தலைப்பை இந்த படத்திற்கு யோசிக்க முடியாது .

படத்தை தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் பார்த்து தனது பாராட்டினை தனது டிவிட்டர் பதிவாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்திற்கு சூர்யாவின் 2D நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நிதியினை வழங்கியுள்ளது.

ஜெய்‌பீம் – தமிழ் சினிமாவின் மகுடம்

Related posts

திருடன்கள் இல்லாத சாதி இருக்கா ? வைரலாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பட டீசர்

Kesavan Madumathy

சூர்யாவின் 39வது படம் ஜெய்பீம்

Kesavan Madumathy

Taanakkaran [2022]: A realistic, empathy-filled portrayal of cop drama

Lakshmi Muthiah

Jai Bhim: An earnestly arresting drama that spins an epic

Lakshmi Muthiah

Leave a Comment