Penbugs
Coronavirus

தமிழகத்தில் ஒரே நாளில் 28.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி : தமிழக அரசு சாதனை

தமிழகம் முழுவதும் நேற்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்கள்மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது இலக்கை விட கூடுதலாக 8 லட்சம் அதாவது 28.06 இலட்சம் தடுப்பூசிகள் அதிகம் செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 1,85,370 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அடுத்து கோவையில் 1,51,685 பேருக்கும், திருப்பூரில் 1,21,634 பேருக்கும் வேக்சின் செலுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் 1,10,332 பேருக்கும், தஞ்சாவூரில் 1,10,120 பேருக்கும், மதுரையில் 1,05,036 பேருக்கும், திருவள்ளூரில் 1,01,213 பேருக்கும் இன்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த சாதனையை முதல்வர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்கள் , அமைச்சர், செயலளார் பாராட்டுக்களையும் , நன்றியினையும் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் முதல் முறையாக சனிக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம்

Kesavan Madumathy

இன்று தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Kesavan Madumathy

IND vs PAK, Today’s Match, Match 16, ICC Men’s T20 World Cup 2021, Playing XI, Pitch report, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Greater Chennai Corporation creates new Hashtag to address fake news

Penbugs

Chennai Rains: Contact numbers of monitoring officers

Penbugs

Chennai Corporation to conduct massive vaccination drive from Friday

Penbugs

Chennai corporation makes wearing mask mandatory

Penbugs

‘Mobile Market’ in Chennai to prevent people gatherings

Penbugs

Leave a Comment