டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், டி20 உலகக் கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றிக்கொள்ள ஐசிசியிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .