Penbugs
CinemaEditorial News

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

அதன்படி திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.

அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டுமே செயல்பட விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதிகப்படுகிறது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-வது வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர்சாதன பொது பேருந்து போக்குவரத்து, 100 சதவீத இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள்/ கலைஞர்களுடன் அனைத்து வகை படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் நாளை தியேட்டர்கள் திறப்பு : பழைய படங்களுக்கு டிக்கெட் புக்கிங் துவங்கியது

Penbugs

சென்னையின் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட உள்ளது

Kesavan Madumathy

Leave a Comment