இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை.
வலிமை படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன்சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் வலிமை படத்தின் முதல் சிங்கிள் இன்று இரவு 10.45 மணிக்கு வெளியாகிறது.
“நாங்க வேற மாதிரி” என துவங்கும் இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.