வெளியானது வலிமை பட மோஷன் போஸ்டர்

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியானது. நீண்ட நாட்களாக காத்திருந்த காரணத்தால் தற்போது வெளியான மோஷன் போஸ்டரை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.