Penbugs
Cinema

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது

கௌதம் மேனன் சிம்பு இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை எடுத்து வருகின்றனர். இப்படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

பின்பு கதையில் சிறிய சிறிய மாற்றங்கள் செய்ததால் இப்படத்தின் பெயர் மாற்றப்பட்டு சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சமீபத்தில் சிம்புவிற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரச்சனை எழுந்து, வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன்பின் சிம்பு தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமாக முடிந்து நேற்றிலிருந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது.

Related posts

முத்துவின் பயணம்: வெளியானது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ டீஸர்

Kesavan Madumathy

Leave a Comment