Penbugs
Cinema

Varane Avashyamund (Groom Wanted) Movie Review

இன்றைய தேதியில் கொஞ்சம்
ஸ்வாரஸ்யமான படம் என்றே
சொல்லலாம்,இன்னக்கி முகப்புத்தகம்,
ட்விட்டர் என சமூக வலைத்தளத்தின்
ஹாட் டாபிக் என்றால் இந்த படத்தில்
சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு காட்சியே,

சரி படத்தை பற்றி பாப்போம்,

சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில்
குடி வரும் மூன்று மலையாளி குடும்பமும்
ஆல்ரெடி அங்கிருக்கும் தமிழ்
குடும்பங்களும், அவர்களின்
வேலை,காதல், குடும்பம்,நட்பு என ஒரு
பேமிலி ட்ராமாவாக போரடிக்காமல் படம்
Feel Good மூடில் பயணம் செய்கிறது,

துல்கருக்கு படத்தில் ஸ்கோப்
கம்மியென்றாலும் கிடைத்த இடத்தில்
எல்லாம் நடிப்பில் சிக்ஸர் தான், நம்ம
தளபதி பட சுந்தரி கண்ணால் ஒரு சேதி
“ஷோபனா ” மேடமும் சுரேஷ் கோபியும்
தான் படத்தை தாங்கிப்பிடிக்கும்
தூண்கள்,

” சார் ஷோபனா சார் “

என்று அசடு வழியும் அளவிற்கு
ஷோபனா தன் நடிப்பிலும் லுக்கிலும்
சத்ரியன் பட பாணியில்
சொல்லவேண்டுமென்றால் அதே பழைய
பன்னீர் செல்வமாக பரத நாட்டியத்திலும்
நம்மை ஒரு ரசிகனாக கட்டி போடுகிறார்,

இன்னொரு பக்கம் சுரேஷ் கோபி மஜா
படத்துல வடிவேல் சொல்லுவது போல “
நெஞ்சு வெடைச்சவனா வேணும்னு
ராயர் அய்யா கேட்டாரு ” ரகத்திலேயே
எல்லா படங்களிலும் முரட்டு தனமாக
நாம பார்த்த மனுஷன் குழந்தையா மாறி
அழகான ஒரு கதாபாத்திரத்தை நமக்கு
அவரின் நடிப்பின் மூலம்
கொடுத்திருக்கிறார் அதுவும் ஷோபனா
மீது காதல் வயப்படும் காட்சிகளில்
சில்லறையை சிதற விடலாம்
மொமெண்ட்டுகள் தான்,

துல்கர் – கல்யாணி ப்ரியதர்ஷன் –
துல்கரின் தம்பி – மற்ற படத்த்தில் வரும்
கதாபாத்திரங்கள் எல்லாம் தங்களது
வேலையை சரி வர செய்திருக்கின்றனர்,
அதிலும் துல்கர் தன் தம்பியை பற்றி
கல்யாணியிடம் சொல்லும் சீன்
கொஞ்சம் நம்மை எமோஷனல்
ஆக்கிவிடும் அங்கு வரும் வசனத்தின்
வழியே,

சென்னை என்ற ஒரு ஊரை
எவ்வளவு அழகாக ரசித்து படம் பிடித்து
மலையாளிகளின் பார்வைக்கு கொண்டு
செல்ல முடியுமோ அதை ஒளிப்பதிவாளர்
சரியாக கொண்டு போய்
சேர்த்திருக்கிறார்,

பாடல்களும் பின்னணி இசையும்
துள்ளல் ரகம் தான் மலையாளத்துக்கு
ஏற்ற வாரு இதமான ஓர் காதலில்,

என்ன பா இதெல்லாம் தெரிஞ்சது தான்
முக்கியமான அந்த சர்ச்சை காட்சி பற்றி
பேசு என்கிறீர்களா..? சரி வாங்க
பேசுவோம்,

எதும் சேதாரம் ஆச்சுன்னா
கம்பெனி பொறுப்பேற்காது
இப்போவே சொல்லிட்டேன்,

ஒரு காட்சியில் சுரேஷ் கோபி முதன்
முதலாக நாய் வாங்கி வளர்க்கும் போது
அவரின் பேச்சை கேட்காமல் நாய் வீட்டு
வாசலில் முரண்டு பிடிக்கும், அப்போது
நாயை அவர் உள்ளே இழுப்பார்
பெல்ட்டை பிடித்து அப்போது
அங்கிருக்கும் ஷோபனா, Hi பெயர் என்ன
என்று மொட்டையாய் கேட்பார், பெண்கள்
என்றாலே கொஞ்சம் கூச்சம் கொண்ட
சுரேஷ் கோபி மிகுந்த கூச்சத்துடன்
“மேஜர் -இல்ல “ஜிம்மி” என்பார் (மேஜர் உன்னிகிருஷ்ணன் என்பது அவர் பெயர்)
தன் பெயரை கேட்கிறார்களோ என்ற
குழப்பத்தில் முதலில் மேஜர்
என ஆரம்பித்து பின்னர்
சுதாரித்துக்கொண்டு ஜிம்மி என்பார்,

ஷோபனா : மேஜர் ஜிம்மி யா,

சுரேஷ் கோபி : இல்ல வெறும் ஜிம்மி
தான், (அந்த ஜிம்மி கூட தற்காலிகமாக
ஷோபனாவிடம் நாய்க்கு ஒரு பெயர்
சொல்லியாக வேண்டுமே என சொன்ன
ஒரு பெயரே தவிர தான் வளர்க்கும்
நாய்க்கு சுரேஷ் கோபி வைத்த பெயர்
அல்ல) ஆக,அந்த நாய்க்கு இங்கே பெயர்
இல்லை,

பிறகு ஒரு காட்சி,

ஒரு மார்க்கெட்டிங் பெர்சன்
தன்னிடம் இருக்கும் Kitchen Equipments –
ஐ விற்பதற்கு அந்த அப்பார்ட்மெண்டிற்கு
வருகிறான் அவனை வெறுங்கையோடு
அனுப்ப வேண்டாம் ஏதாவது ஒரு
பொருள் வாங்கலாம் என ஷோபானாவும்
சுரேஷ் கோபியும் ஆளுக்கொரு பொருள்
வாங்குகிறார்கள் அதில் சுரேஷ் கோபி
காய்கறி வெட்டும் ஒரு கத்தியை மட்டும்
வாங்கி வைத்து விட்டு துல்கரின்
தம்பியாக வரும் கார்த்திக்குடன்
சேர்ந்து தான் வளர்க்கும் ஜிம்மியான
தன் நாயுடன் பீச் வாக்கிங் செல்கிறார்,

தன் நாய் சொல்வதை கேட்காது என
அதை கண்ட்ரோல் செய்ய ஏதோ ஒரு
கண்ட்ரோல் விசிலை கார்த்திக் கையில் கொடுத்து அவன் நாயின் பெல்ட்டினை
பிடித்துக்கொண்டு வருவான் உடன்
சுரேஷ் கோபியும் நடந்து வருவார்,
அப்போது கார்த்திக் அந்த சின்ன
விசிலை கீழே போட்டு விடுவான்,

கார்த்திக் : ஜிம்மி ஜிம்மி இதோட பெயர்
ஜிம்மி தான..?

அய்யயோ போச்சு (தன் பேச்சை
கேட்பதற்காக நாயை தன் வசத்தில் வைக்க இருந்த அந்த கண்ட்ரோல்
விசிலை கீழே போடுகிறான்)

சுரேஷ் கோபி : ஹே, அந்த கண்ட்ரோல் விசிலை தொலைச்சுடாத (Don’t Lose it)
அது இல்லேன்னா நாய் நம்ம
சொல்லுறத கேட்டு நடக்காது,

கார்த்திக் : Actually,
இந்த விசில் எல்லாம் தேவையில்லை
நாய்களுக்கு நம்மல பிடிச்சுருச்சுனா
நம்ம அதுங்கள என்ன பெயர் வச்சு
கூப்பிட்டாலும் நம்ம பின்னாடியே
பாசமா ஓடி வரும்,

சுரேஷ் கோபி : பிரபாகரா..?

(நாய் சுரேஷ்கோபியிடம் ஓடி வருகிறது)

கார்த்திக் : பாத்திங்களா உங்கள பார்த்து
நாய் ஓடி வருது,

இவ்வளவு தான் சீன், ஐந்தறிவு உள்ள
நாய்க்கும் ஆறறிவு உள்ள மனிதனுக்கும்
இடையே உள்ள உறவை எவ்வளவு
அழகாக இயக்குநர் சொல்லியிருக்கிறார்
அதை ரசிக்க தெரியாதவர்கள் தான்
இங்கே பிரச்சனை செய்து கொண்டு
இருக்கிறார்கள், நம்ம கொஞ்சம் Rewind
செய்யலாம் எதற்காகன்னு
கேட்டிங்கன்னா இந்த “பிரபாகரா” என்ற
சுரேஷ் கோபி நாயை அழைக்கும்
வசனத்தை வைத்து அது தமிழ்
இனத்தலைவர் பிரபாகரனை
அசிங்கப்படுத்திவிட்டார்கள் என்று ஒரு
சாரா அமைப்பு இங்கே பிரச்சனை
பண்ணிகொண்டு வருகிறார்கள்,அதற்கு
நாங்கள் தமிழ் மக்களின்
உணர்வுகளுக்கும் கலாச்சாரத்துக்கும்
மதிப்பு கொடுப்பவன் நான் அந்த காட்சி
கேரளாவில் மிகவும் பேமஸான ஒரு
படத்தின் வசனம் மட்டுமே
அதுவுமில்லாமல் பிரபாகரன் இங்கு
ஒரு பொதுவான பெயரே, யாரையும்
குறிப்பிட்டு கேளி செய்யவில்லை என்று
சொல்லி துல்கர் மன்னிப்பும்
கேட்டுவிட்டார்,ஆனாலும் இந்த ஒரு சாரா
அமைப்புகள் பிரபாகரன் என்ற பெயரில்
ஆரம்பித்த பிரச்சனையை தமிழன் –
மலையாளி, துல்கர் ஒரு முஸ்லீம் என
வேறு வேறு திசையில் பிரச்சனையை
மேலும் மேலும் வலுப்படுத்துகின்றனர்,

இப்போது Rewind செய்யலாம்,

நம்ம ஊரில் சந்திரமுகி படத்தில் பிரபு
பேயாக மாறி நடனம் ஆடும் தன்
மனைவியை பார்த்து ” என்ன கொடுமை
சரவணன் சார் இது ” – ன்னு ரஜினியை
பார்த்து சொல்லுவார், ரொம்பவே
சிம்பிள் ஆன ஒரு வசனம்,எத்தனையோ
வருடங்கள் கழித்து இப்போது சில
வருடங்களுக்கு முன் அந்த வசனம் மீம்
கிரியேட்டர்ஸ்களால் எந்த அளவு பேமஸ்
ஆகமுடியுமோ அந்த அளவு ஆனது
உதாரணத்திற்கு நம்ம காண்ட்ராக்டர்
நேசமணி தலையில் சுத்தியல் விழுந்தது
போன்று, இது நம்ம ஊரில் நடந்த ஒரு
விஷயம்,

இதே போல 1988 – ல் வெளியான
“பட்டன பிரவேஷம்”என்கின்ற
மோகன்லால் படத்தில் நம்ம சத்ரியன்
வில்லன் திலகனும் (அனந்தன்) அந்த
படத்தில் வரும் ஜனார்த்தனன்
(பிரபாகரன் தம்பி என்ற பெயர்
கொண்டவர் படத்தில்) இருவரும்
பேசிக்கொள்வார்கள்,

பிரபாகரன் தம்பி :

அனந்தன் இங்க இருந்து நான் போறேன்
(இவ்வளவு நாள் கூட தன்னுடன்
இருந்துவிட்டு இப்போது திடீரென
செல்கிறேன் என்பது போல் ஒரு காட்சி)

அனந்தன் : பிரபாகரா (Shocking Dialogue

  • அதாவது இவ்வளவு நாள் உடன்
    இருந்துவிட்டு திடீரென்று போகிறேன்
    என்று சொல்லும் போது வரும்
    அதிர்ச்சியான நேரத்தில் அவர் “
    பிரபாகரா ” என வீட்டை விட்டு
    போகிறேன் என சொல்லும் நண்பனை
    அழைப்பது போன்ற காட்சி)

நம்ம ஊரில் என்ன கொடுமை சரவணன்
சார் இது – ன்னு சொல்லுற வசனம்
சென்னை 28 பிரேம்ஜி மற்றும் ஒரு சில
படங்கள், மீம்ஸ்கள் என எப்படி பேமஸ்
ஆனதோ அப்படி தான் கேரளாவில்
அனந்தன் அந்த படத்தில் சொல்லும்
“பிரபாகரா” என்ற வசனம் அங்கிருக்கும்
சேட்டன் மீம்ஸ் கிரியேட்டர்களால்
பெரிதும் பேமஸாக்கப்பட்டது, ஆக நம்ம
எப்படி சென்னை 28 போன்ற படங்களில்
வசனமாக பயன்படுத்தினோமோ அதை
போல அவர்களும் தங்கள் படத்தில்
பொதுவான பெயர் தானே என
பயன்படுத்தி இருக்கிறார்கள் இதன்
பின்னால் எந்த குறியீடும் இல்லை எந்த
இனத்தையும் தாக்க வேண்டும் என்ற
எண்ணமும் இல்லை, இது Quarantine
காலம் என்பதால் Content கிடைக்காமல்
சுற்றிவரும் சில நஞ்சு கலந்த எண்ணம்
கொண்ட மனிதர்களால்
வேண்டுமென்றே Content ஆக்கப்பட்டு
துல்கரின் குடும்பம் வரைக்கும்
அசிங்கப்படுத்தும் கேவலமான
நிகழ்வுகளும் அவர்களால் இங்கே நடக்கப்படுகிறது,

பிரபாகரன் என்பது தமிழின தலைவரின்
பெயர் சரி, மூன்றாம் பிறை படத்தில்
“சுப்பிரமணி” என்று நாய்க்கு பெயர்
வைத்தாரே பாலு மஹேந்திரா, இப்போ
Content – க்காக தன்னுடைய ரீச் – காக
சலம்பும் சில நல்ல உள்ளங்கள் மூன்றாம்
பிறை போய் பார்த்துவிட்டு வரவும்,

எது எப்படியோ அழகான ஒரு Feel Good
பேமிலி ட்ராமா தான் இன்று நான் பார்த்த
இந்தப்படம்,

*
Varane Avashyamund

இயக்குநர் அனூப் சத்யன் வரைந்த
குடும்பங்கள் பேசும் கலர்ஃபுல் ஓவியம்..!!

எழுத்து : Shiva Chelliah ❤️

Related posts

Happy Birthday, Thala!

Penbugs

Director KV Anand passes away

Penbugs

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

Shiva Chelliah

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்

Kesavan Madumathy

நகைச்சுவை நடிகர் “வடிவேலு பாலாஜி” உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்

Penbugs

Simran on working in Tamil Remake of Andhadhun

Penbugs

Up until 25, I used to think about suicide: AR Rahman

Penbugs

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

Trailer of Sufiyum Sujatavum is here!

Penbugs

Sivakarthikeyan starrer Doctor first look is here!

Penbugs

Reports: Actor Vijay questioned by Income Tax officials

Penbugs

ARR reacts to Khatija-Taslima face-off; says it’s her choice to wear burqa

Penbugs