சென்னை சென்ட்ரலலில் இருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இதனால் இன்று பட்டாபிராம், இந்து கல்லூரி ரயில் நிலையங்களில் மின்சார ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.30, 9.45, 11.30, பிற்பகல் 12, 1 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து காலை 9.50, 11.05, பிற்பகல் 12.50 மணிக்கு அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து காலை 10 மணி மற்றும் 11.45 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து காலை 10.30 மற்றும் பிற்பகல் 12.10 மணிக்கு கடம்பத்தூர் வரை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் வேளச்சேரியிலிருந்து காலை 9.05 மற்றும் பிற்பகல் 12.15 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள மற்றும் வேளச்சேரியிலிருந்து காலை 11.20 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில், ஆகிய 16 ரயில்கள் இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று நிற்காது.
MS Dhoni was a special man in the run chase: Michael Holding