40 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தான் இசைப்பணிகளை கவனித்து வந்த இளையராஜாவிற்கும் பிரசாத் ஸ்டூடியோவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறி நீதிமன்றம் வரை சென்றது .
தன்னுடைய இசைக்கோப்புகள் , கருவிகள் , ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும் , ஒரு நாள் ஸ்டூடியோவில் தியானம் செய்யவும் அனுமதி வேண்டினார் இளையராஜா .
நீதிமன்றமும் சில நிபந்தனைகள் வழங்க பிரசாத் ஸ்டூடியோவும் ராஜாவிற்கு அனுமதி தந்தது . ஆனாலும் பிரச்சினை சுமூகமாக முடியாத காரணத்தினால் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெறியேறினார்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரிலுள்ள எம்.எம்.பிரிவியூ திரையரங்கு, இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ரிக்கார்டிங் ஸ்டுடியோவாக மாற்றப்பட்டு இன்று புதிய பாடல் பதிவுடன் துவங்கியது.
இந்த ஸ்டூடியோவில் முதல் பாடலாக வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கும் இளையராஜா அதற்கான பாடல் பதிவினை இன்று தொடங்கினார்.
சூரி நடிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

