Coronavirus

கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஏற்றம்

கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்.

மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு என தனித்தனியாக விலையை நிர்ணயித்தும், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவில் விற்பனையாகும் கொரோனா தடுப்பூசியின் விலைகளை ஒப்பிட்டும் இந்த புதிய விலைப்பட்டியலை சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தற்போது விற்கப்படும் கொரோனா மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசி விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ஒரு டோஸ் கோவிஷீல்டு ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.250-க்கும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் போடப்படுகிறது.

சீரம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.1500க்கும், ரஷ்யாவில் ரூ.750-க்கும், சீனாவில் ரூ.750க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் உலகளவில் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

Spanish Princess Maria Teresa dies due to coronavirus

Penbugs

Chennai Corporation to conduct massive vaccination drive from Friday

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,865 பேர் பாதிப்பு …!

Penbugs

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

Penbugs

இன்று ஒரே நாளில் 5723 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு

Penbugs

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு

Anjali Raga Jammy

Kimberly, Trump Junior’s girlfriend tested positive for COVID19

Penbugs

Battled suicidal thoughts, depression: Robin Uthappa

Penbugs

Corona outbreak: Sachin Tendulkar donates 50 Lakhs

Penbugs

Leave a Comment