Cinema

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த அவர்களின் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல்

இன்று காலையில் மாரடைப்பு காரணமாக பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த அவர்கள் காலமானார்.

அதனை தொடர்ந்து பல நடிகர்களும் பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் TR அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில்,

“தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது.

மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே வி ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது.

அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது.

சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.

தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.

பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்.

இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே வி ஆனந்த் அவர்கள் மிக

முக்கியமானவர்.

நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு.

அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும் “

என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Karthik Subbaraj to direct Vikram and Dhruv Vikram

Penbugs

Shobhana pens an emotional note for SPB

Penbugs

Tovino Thomas still in ICU, clinically stable

Penbugs

Happy Birthday Karthi!

Penbugs

இசையின் ஏக இறைவா..!

Kesavan Madumathy

COVID19: Chinmayi sings to help daily wagers

Penbugs

சில்லுக்கருப்பட்டி பட இயக்குநரை பாராட்டிய சாய் பல்லவி!

Penbugs

In Pictures: Nayanthara and Vignesh Shivn Celebrating Christmas

Anjali Raga Jammy

Toxic environment: The Ellen Show is under investigation

Penbugs

Mom Series- A tribute

Penbugs

Vishnu Vishal and Jwala Gutta are engaged

Penbugs

தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என விஜய் மறுப்பு

Kesavan Madumathy

Leave a Comment