Penbugs
Cinema

என்றுமே ராஜா நீ ரஜினி …!

தமிழ் சினிமா ரசிகர்கள் அதுவரை தங்கள் மனதில் வைத்திருந்த கதாநாயக பிம்பங்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்த ஒருவர் , அரிதாரங்கள் பூசி படிந்த கேசத்தோடு வந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில் வெறும் பரட்டை தலையோடு முடியை கோதிக் கொண்டு சிங்க நடை போட்ட ஒருவர் , கதாநாயகன் என்றால் நல்ல பிள்ளையாக சிகரெட் பிடிக்காமல் இருந்து கொண்ட காலக்கட்டத்தில் அந்த சிகரெட்டையே வித விதமாக பிடித்து மக்களை இவன் கட்ட ஏதோ ஒண்ணு இருக்குயா என அட போட வைத்த ஒருவர் ,

அவர்தான் ” தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ”

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கான புதிய ராஜபாட்டையை துவங்கியவர் ரஜினி..!

சாதாரண மக்களின் பிரதிபலிப்பாக ஒருத்தன் திரையில் வந்ததை மக்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டார்கள் அந்த முரட்டுதனமும் , நடையில் இருந்த வேகமும் , சின்ன சின்ன ஸ்டைல்களும் வெகுஜனத்தை எளிதாக கவர்ந்தன…!

ஒரு விசயத்தைப் பிடிக்கவில்லையென்றால் ஆயிரம் காரணம் சொல்லலாம் . ஆனால் ஒரு விசயம் பிடித்துப் போக காரணம் பெரிதாக தேவையில்லை அப்படித்தான் ரஜினிகாந்த்தை திரையில் ரசிப்பதும் கதை ,திரைக்கதையை தாண்டி ரஜினியின் மேனரிசங்களை ரசிக்கவே ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும் அது பாபாவாக இருக்கட்டும் ,இல்லை லிங்காவாக இருக்கட்டும் ரஜினியை கொண்டாட காரணம் இல்லாமல் கொண்டாடி கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள் …!

மற்ற நடிகர்களுக்கும் தலைவருக்கும் இருக்கிற வித்தியாசம் டைட்டில் கார்டிலிருந்தே புல்லரிப்பை தர்றது தலைவர் மட்டுமே அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் …!

திரு . ரஜினிகாந்த் …!

” பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா ”

எல்லாருக்குமே ஒரு கேள்வி இருக்கும் எப்படி சினிமாவே தெரியாத சின்ன குழந்தைக்கு கூட பாத்த உடனே இவரை பிடிக்குது ஏன்னா குழந்தைகளுக்கு கதையோ , வசனமோ முக்கியம் இல்லை அதை தாண்டி ஒரு மேனரிசம் ,ஈர்ப்பு வேணும் அது அவர்கிட்ட அதிகமாகவே இருக்கு..!

இப்ப யாருக்கு வேணா ரசிகரா இருக்கலாம் ஆனா கண்டிப்பா பால்யத்தில் முதல் ஈர்ப்பு ரஜினிதான் !!!

பால்யத்தில் சினிமா பார்க்க ஆரம்பிக்காத காலத்தில் கூட இவர் சுலபமாக நமக்குள்ள வருவார் எப்படினா பெரும்பான்மையான முடி திருத்தகங்களில் இவர் போட்டோ தான் இருக்கும் வெறும் பிளாக் அண்ட் ஒயிட்டா இருக்கும் அந்த போட்டாவில் இருக்கிற சிரிப்பு ,அப்பறம் அந்த கண்ணு யாருயா இந்த மனுசன் என்று தேட வைக்கும் …!

தொண்ணூறுகளில் பிறந்த மக்கள் எல்லாருமே ரஜினியை பெரிய மாஸ் ஹீரோவாகவே பார்த்து பழகிட்டோம் எது பண்ணாலும் அதுல ஒரு ஸ்டைல் நமக்கு புடிச்சிடும் …!

எனக்கு தெரிஞ்சி அப்ப ஷு போட்டு முதன் முதல்ல நடக்க ஆரம்பிச்ச எல்லாருக்கும் பாட்ஷா பேக்ரவுண்ட் கண்டிப்பா கேட்டு இருக்கும்…!

முத்து ஓபனிங் சாங் ஜம்ப் , கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதுக்கு எஜமானன் இந்த லைன்ல வரும் சின்ன புன்னகைனு வியந்து பார்த்த நாட்கள் உண்டு !

நான் முதன்முதலில் தியேட்டரில் பார்த்த ரஜினி படம் பாபா தான் ஏதோ ஒரு மாயஜால காட்சிக்கு போன மாதிரி ஒரு உணர்வு என்ன பண்ணாலும் கைதட்றாங்க ரசிக்கிறாங்கனு படம் பாக்காம மக்களின் கொண்டாட்டத்தை பாத்துட்டு வந்தேன்…!

பாபா படத் தோல்வியை எல்லாரும் அப்போ ஏதோ நடக்காத விசயம் நடந்த மாதிரி எல்லாரும் அதிசயமாய் பேசிட்டு இருந்தாங்க ஏன்னா ரஜினி தோக்கறது ஆபூர்வம் …!

நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமில்லாத ஒன்றை திரையில் யார் வேணா செய்யலாம் ஆனா சில பேர் செஞ்சாத்தான் ரசிக்க முடியும் ரஜினி பண்ணா அங்க இயற்பியல் விதியை யாரும் பார்க்க மாட்டோம் ஏன்னா அது ரஜினி …!

சினிமா பற்றி தெரிய ஆரம்பிச்ச அப்பறம்தான் உணர ஆரம்பிச்சது நாம எல்லாரும் ஒரு பெரிய மகா நடிகனை வெறும் கமர்சியல் பிம்பமாக திசைத்திருப்பி வைச்சிருக்கோம் என்று அது அவரே விரும்பி ஏத்துகிட்டாலும் ரஜினி என்ற நடிகன் இன்னும் அதிகம் வெளிப்பட்டு இருக்கலாம் என்ற ஆதங்கம் உண்டு …!

யானை , ரயில் , கடல் மாதிரிதான் ரஜினியும் எத்தனை முறை திரையில் பார்த்தாலும் சலிக்காத ஒரு விசயம் ..!

அவரை வெறுக்கிறவங்க கூட அவரை திரையில் பார்த்தா தன்னை மறந்து ரசிக்க துவங்கிடுவாங்க அதுதான் ரஜினியின் பவர்…!

அடுத்து தலைவரிடம் பார்த்து வியந்த குணம் அவரிடம் இருக்கும் பணிவு நிலை உயரும்போது பணிவு கொண்டால் இந்த உலகம் உன்னை வணங்கும் என்ற வரிக்கு அப்படியே பொருத்தமா இருக்கிறது அவரின் தனிச்சிறப்பு…!

வாழ்க்கையின் மேல் ரொம்ப நம்பிக்கை இல்லாம இருந்தா தயக்கமில்லாமல் ரஜினியின் மேடைப் பேச்சினை கேட்டகலாம் ஒவ்வொன்றும் முத்துக்கள் அவரின் கரிஷ்மா நம்மளை ஒரு பாஸிட்டிவ் மோடுக்கு நிச்சயமா எடுத்து செல்லும் …!

அரசியலில் அவரை விமர்சனம் பண்ண ஆயிரம் பேர் , ஆயிரம் காரணங்களோடு காத்திருக்கலாம் ஆனால் திரையில் என்றுமே சிங்கம் ரஜினிகாந்த் மட்டுமே…!

ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்ன ஆயிரம் முறை யோசித்து பார்ப்பார் இறங்கிவிட்டால் தன்னுடைய உச்ச பட்ச உழைப்பை தந்து பார்ப்பார் அதுதான் ரஜினிகாந்த் அரசியல் களத்திலும் வெற்றியடைய அவர் வணங்கும் இறைவன் அருள்பாலிக்கட்டும் …!

” இலக்கை அடையும் வரை செவிடா இருந்தா வாழ்க்கையில் முன்னேறலாம் ”

இது ரஜினி பின்பற்றும் யுக்தி இதை விட பெரிய படிப்பினை நமக்கு எதுவும் தேவையில்லை ..!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்…!

Related posts

My ‘Kaala’ experience

Penbugs

Andhadhun Remake: Prashanth to play the lead role

Penbugs

Thalapathy 64 update: First look date

Penbugs

Saindavi-GV Prakash blessed with baby girl

Penbugs

Grew up watching adults being unkind to each other: Jennifer Aniston on positive outlook

Penbugs

என் பேரன்புடைய அப்பாவுக்கு!

Shiva Chelliah

‘It’s gonna be fantastic’: Courteney Cox on Friends reunion

Penbugs

Aditi Rao Hydari opts out of Tughlaq Durbar

Penbugs

Hansika Motwani becomes first South Indian actor to get custom GIFs

Penbugs

Watch: Sarvam Thaala Mayam teaser here!

Penbugs

Kamal Haasan’s Aalavandhan to have a rerelease in Mid-2020

Penbugs

Emmy 2019 Awards: Complete list of winners

Penbugs