Penbugs
Cinema

Nani’s Gang Leader | Tamil Review

முழுக்க முழுக்க அதிரடி சண்டைக்‌காட்சிகளுக்கு பெயர் போன தெலுங்கு சினிமாவில் தற்போது இயல்பான கதைகளை கையாளத் துவங்கியது நல்ல மாற்றம், அதன் தொடர்ச்சியில் வந்துள்ள திரைப்படம் கேங்க்லீடர்…!

சாதரண கதையை தன் திரைக்கதையின் மூலமும் , முதல் பாதியின் நகைச்சுவை காட்சிகள் மூலமும் இயக்குனர் நல்ல ஒரு பொழுதபோக்கு படமாக தந்துள்ளார்..!

இதுவரை இந்திய சினிமாவில் வந்த பழிவாங்கும் கதைதான் என்றாலும் கதை சொன்ன விதத்தில் படத்தின் வெற்றி உள்ளது..!

அனிருத் – நானி இணை தொடர்ந்து இரண்டாவது படமாக வெற்றி கனியை பறித்துள்ளது.தமிழ் சினிமாவில் தனுஷ் – அனி இணை போல் தெலுங்கில் நானி – அனி இணை வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத்தின் இசை , பிரமோசனுக்காக வெளியிடப்பட்ட கேங்கு லீடர் பாடல் வைரல் ஹிட் ஆனது படத்தின் ஓபனிங்குக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வர வைத்துள்ளது. படத்தின் பிண்ணனி இசையும் ஒரு ஜனரஞ்சகமான படத்திற்கு ஏற்றார்போல் உள்ளது , அதுவும் தொடக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை , மகிசாசுரமர்த்தினி பாடலை இரண்டு இடத்தில் அவர் பொருத்திய இடம் என அனிருத் ஆட்டநாயகனாக ஜொலிக்கிறார்..!

நானியும் தனது பங்கினை சிறப்பாக செய்துள்ளார் பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் அந்த இமேஜ் பல இடங்களில் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

இடைவேளைக்கு பிறகான காட்சிகள் சிறிது அலுப்பினை தந்தாலும் அதனை மறந்து ரசிக்க வைக்கும் காட்சிகள் படத்தில் சில இருப்பதால் படம் நிச்சயம் பார்க்க கூடிய நல்ல ஜனரஞ்சகமான படம்..!

மொத்தத்தில் ஒரு அசால்ட் சிக்ஸர் தான் கேங்க்லீடர் ..!

Related posts

Vettaikaaran director Babu Sivan dies at 54

Penbugs

Thalapathy 64: Official announcement

Penbugs

The lyric video of the song ‘Sarvam Thaala Mayam’ is here

Penbugs

In Pictures: Success Meet | Psycho Movie Team

Penbugs

I was raped in my childhood: Rahul Ramakrishna

Penbugs

பழம்பெரும் ஒளிப்பதிவாளர் கண்ணண் காலமானார்

Kesavan Madumathy

Ajith was in hospital bed when he heard Kandukondein script: Rajiv Menon

Penbugs

அல்போன்ஸ் தீட்டிய காதல் ஓவியம்

Shiva Chelliah

GoT actor Hafthor Bjornsson sets deadlift record

Penbugs

மாஸ்டரின் மாஸ் ரைடு…!

Shiva Chelliah

Actor Sivakumar regrets for his impulsive behaviour

Penbugs