நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியைச் சேர்ந்த, 47 வயது பெண், அபுதாபியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம், விமானத்தில் கேரளா வந்த அவர், தனிமைப்படுத்தப்பட்டார்.
அங்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.தொடர்ந்து, ‘இ – பாஸ்’ பெற்று, 26ம் தேதி கூடலுார் வீட்டுக்கு வந்தார். தமிழக – கேரள எல்லையான பாட்டவயல் பகுதியில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.நேற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குடியிருந்த பகுதிக்கும், ‘சீல்’ வைக்கப்பட்டது. குணமடைந்த பெண்ணுக்கு, மீண்டும், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது