Cinema

இசையின் ஏக இறைவா..!

ஆச்சரிய குறிகள் பயன்படுத்தினால் பயன்படுத்திகொண்டே இருக்க வேண்டிய மனிதன் …!

இசையின் நாயகனாக பலர் இவரை ரசிக்கலாம் ஆனால் நான் ரசிப்பது ஒரு தனிமனிதனாக ….!

தான் சார்ந்த துறையில் மட்டுமில்லாமல் ஒரு மனிதன் எந்த அளவிற்கு தன்னை இறைவனுக்கு முழுவதுமாக அர்பணிக்க வேண்டும் என்பதை இவரை வைத்து தான் தெரிந்து கொள்கிறேன் !

வெற்றியோ தோல்வியோ அதை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து பழகி கொண்டதால்தான் மாபெரும் மனிதனாக திகழ்கிறார் …!

வானம் அளவிற்கு அவர் உயர்ந்து நின்றாலும் அவர் கால்கள் இன்னும் தரையில்தான் உள்ளது ..!

ரோஜாவில் அறிமுகமாகி இன்றும் ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருக்கும் என் இசை நாயகன்..!

தொண்ணூறுகளில் பிறந்த அனைவருமே ரகுமான் என்ற புயலால் வீழ்த்தப்பட்டவர்கள்தான் வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில் ரகுமான் இசையின்றி கடந்து இருக்க இயலாது ‌…!

காதல் , சோகம் , ஆனந்தம் , நாட்டுப்பற்று ,அமைதி என எல்லாத்துக்கும் ரகுமானின் இசை உள்ளது !!

ரகுமானின் இசை ஒரு மொழிக்கான இசையல்ல ஏனெனில் அவரின் இசையே ஒரு மொழியாக இங்கு கோலாச்சுகிறது…!

ரகுமானின் பாடல்கள் பற்றி பலரும் பேசலாம் அல்லது பாடல் வெற்றி பெறுவது இயக்குனரின் காட்சியமைப்பு , பாடல் வரிகள் வைத்தும் மதிப்பிட முடியும் ஆனால் பின்னணி இசை முழுக்க முழுக்க இசையமைப்பாளரின் கையில் உள்ளது எனக்கு பிடித்த ரகுமானின் பின்னணி இசை காட்சிகள்….!

1.ரோஜா : தேசியக்கொடியை எரியும் காட்சி
2. ஜென்டில்மேன் கிளைமேக்ஸ் காட்சி
3. திருடா திருடா சேசிங் காட்சி
4.காதலன் எஸ்பிபி பிரபுதேவாக்கு அறிவுரை சொல்லும்போது ஒரு புல்லாங்குழல் மெலிசா வருடிட்டு போகும்
5 . பாம்பே கிளைமேக்ஸ் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் புல்லரிக்கும்

உபரி தகவல் : மார்ச் 30 2011,மொகாலி

இந்தியா பாகிஸ்தான் அரையிறுதி அணித்தலைவர்கள் டாஸ் போடும்போது #மலரோடுமலர்இந்த (பாம்பே )பாடலின் புல்லாங்குழல் பதிப்பு போடப்பட்டபோது ரகுமானின் இசை எவ்வாறு இரு நாடுகளுக்கிடையில் இணைப்பு பாலமாக கூட இருக்கு ஒரு பெருமை …!

6. அலைபாயுதே கிளைமேக்ஸ் வசனமே ரொம்ப கம்மி ஆனா அந்த பிரிவின் ஏக்கத்தினை ஒரு புல்லாங்குழல் இசையோடு படம் முழுக்க நம்மளை கட்டி போட்டு இருப்பார் தலைவன் ..!

உபரி தகவல் : அலைபாயுதே மாதவன் ஓபனிங் சாங்குக்கு பேக் ஸ்டிரிட் பாய்ஸ் என்ற ஆல்பத்தை பயன்படுத்திக்கொள்ள மணிரத்னம் ஆடியோ கம்பெனிக்கிட்ட பர்மிசன் கேட்டதுக்கு ஒரு கோடி கேட்டார்களாம் ரகுமான் அதுலாம் வேண்டாம் என்று போட்ட பாடல்தான் என்றென்றும் புன்னகை ..!

7. ரட்சகன் தீம் மியூசிக் எப்பவுமே மாஸா புதுசா இருக்கும்

8. முத்து ரஜினியின் முழு கரிஸ்மாக்கு ஏத்த ஒரு படம் அதுக்கு ஏத்த மாதிரி எல்லா சீனுக்கும் பேக் ரவுண்ட் செம மாஸ்

9. கன்னத்தில் முத்தமிட்டால் இந்த படத்தின் அறிமுக காட்சியில் இருந்து கிளைமேக்ஸ் வரைக்கும் எல்லாமே கண்ணுல தண்ணி வர வைக்கிற ஒரு பின்னணி இசை அதுவும் ரயில்வே ஸ்டேசன் உரையாடல் சீன் கிளைமேக்ஸ் சீன் முடிஞ்ச உடனே வெள்ளை பூக்கள் உலகம் எழுகவேனு ரகுமான் குரலில் கேட்கும்போது அந்த நொடியே செத்து போலாம் சார்

10.இந்தியன் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிக்கும் போது வரும் ஹம்மிங்

உபரி தகவல் : சங்கர் இந்த காட்சியை சொல்லிட்டு தேச பக்தினா என்னனு எல்லாருக்கும் உணரந்தே ஆக வேண்டும் என்று சொன்னாராம் ரகுமான் அதை இருநூறு சதவீதம் தன் இசையால் கொண்டு வந்தார் என்று சங்கரே சொல்லி இருக்கார்

11.இருவர் பிரகாஷ்ராஜ் – மோகன்லால் பேசும்போது மிருதங்கம் மட்டும் பயன்படுத்தி இருப்பார் அந்த சீன்..!

12.ஜோதா அக்பர் : பிரமாண்டமான படத்துக்கு உண்டான பிரமாண்டமான பினன்ணி இசை மிரட்டி இருப்பார்

13‌ & 14 : பாபா , படையப்பா இரண்டத்துக்குமான பின்னணி இசை ஒண்ணு ஆன்மிகமான இசை மற்றொன்று முழுக்க முழுக்க கமர்சியல் இசை

இந்த மாதிரி காட்சிகளுக்கு தன் இசையினால் மெருகேற்றியது ரகுமானின் இசை ..!

ரகுமானின் பெரிய பலம் தனக்கு தேவையானவற்றை பாடகர்களிடம் தெளிவாக பெற்று அதில் தற்போதைய டெக்னாலஜியை பயன்படுத்தி இசை கோர்ப்பினை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்வது …!

பஞ்சதன் ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு மாயஜாலங்கள் நிகழ்த்தும் ,நிகழ்த்தி கொண்டிருக்கும் ஒரு அற்புத உலகம் என்று பல இயக்குனர்கள் சொல்லி இருக்கின்றனர் ..!

” If music wakes you up, makes you think, heals you…then, I guess the music is working ”

– A.R.Rahman ….!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசையின் ஏக இறைவா

Related posts

When Rajinikanth wanted to do the role of ‘Bharathiyar’

Penbugs

ஆமிர்கானின் உதவியாளர்‌ மரணம் : இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆமிர்

Penbugs

After Amitabh Bachchan, Abhishek Bachchan also tested positive for COVID19

Penbugs

Filmfare Awards 2020: Full list of winners

Penbugs

Girish Karnad passes away at 81!

Penbugs

Mysskin’s Pisasu 2 to star Andrea Jeremiah as lead

Penbugs

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

Ellen DeGeneres tested positive for COVID19

Penbugs

Prithviraj Sukumaran tested positive for coronavirus

Penbugs

Happy Birthday, Mr.Feel Good Musician

Penbugs

Sanam Shetty lodges police complaint on Tharshan

Penbugs