இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளவர் லோகேஷ் கனகராஜ்.
இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
அடுத்து கமல் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று இன்று உறுதியானது. இதனை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ”என் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஒரு தகவல. எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என் உடல்நலனை நன்கு கவனித்துக் கொள்வேன். விரைவில் இன்னும் பலத்துடன், திடத்துடன் வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
