தமிழ்நாட்டில் ரசிகர் பட்டாளம் அதிகமுள்ள நடிகர்களில் சிம்புவும் ஒருவர். இப்பொழுது வளர்ந்து வரும் நடிகர்கள் பலர்கூட சிம்புவின் ரசிகர்கள்.
இவருக்கு நடுவில், பல இடையூறுகள் ஏற்பட்ட சமயத்தில், ரசிகர்களே பக்கபலமாய் இருந்தனர்.
இவர் தன் ரசிகர்களிடம் இயல்பாக பழகுவார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அது மட்டுமின்றி தனது ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, சிம்பு தனது ரசிகரின் பிறந்தநாள் அன்று அவருக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாய் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு வாழ்த்தியுள்ளார்.
தொலைபேசியில், சிம்பு தனது ரசிகரிடம் நலம் விசாரித்தப்பிறகு, அவரிடம் தன் குடுப்பத்தைப்பற்றி கேட்டுள்ளார். பின், குடும்பம்தான் எல்லாம் பிறகுதான் நான் என்றும், குடுப்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பதிவு செய்துள்ளார்.
இதேபோல், சில மாதங்களுக்கு முன் சிம்பு தனது ரசிகருக்கு கொரோனா வந்ததை அறிந்து அவருக்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.
‘நண்பர்கள் தினம்’ முன்னிட்டு இவர் பாடல் ஒன்று வெளிவரவுள்ளது.
