Coronavirus

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மக்கள் உரிய மரியாதை வழங்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மக்கள் உரிய மரியாதை வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது.

நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்த மருத்துவா் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்த நிலையில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மனித குலத்திற்கே சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினைச் சார்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தையே மறந்து, தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு உயிரும் இந்த அரசுக்கு முக்கியம் என்று கருதி, இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே, களத்தில் முன்னின்று பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன். இவர்களது பணியினை நாடே போற்றி, நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை, இறைவனுக்கு நிகராக நான் கருதுகின்றேன்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மருத்துவப் பணியில் ஈடுபட்டு, நோய்த் தொற்றுக்கு ஆளாகி, தங்கள் இன்னுயிரை தந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கின்றது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தன்னலம் கருதாமல், மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரைத் துறப்பவர்களுக்கு, தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் எனவும், மருத்துவர்கள் மற்றும் பிற களப் பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும், தமிழக அரசு உங்கள் பக்கம் முழுமையாக நிற்கும் என்பதையும் இத்தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

First in TN: Vellore Siddha centre to hold clinical trials for COVID-19 treatment

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan and Aaradhya also tested positive

Penbugs

14YO sexually assaulted by two teens in COVID19 centre

Penbugs

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

Penbugs

COVID19: TN crosses 21000 mark, 938 cases today

Penbugs

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs

Usain Bolt tested positive for coronavirus

Penbugs

COVID19: Ajith donates Rs 1.25 Crores

Penbugs