Cinema

| 24 – A Vikram Kumar’s Sci – Fi Theory |

2009 – இல் இயக்குநர் விக்ரம் குமாருக்கு அடித்த ஜாக்பாட் தான் “யாவரும் நலம்” | “13B”, பேய் படங்களின் அத்தியாயத்தை உடைக்கும் அளவிற்கு கதையிலும் டெக்னாலஜியிலும் ஒவ்வொரு காட்சியமைப்பிலும் புதுமை தந்தார், அதற்கு முன்பு 2003 – இல் சிம்பு – த்ரிஷாவின் நடிப்பில் அவர் இயக்கிய “அலை” படம் பெரிதாக போகவில்லை,இன்று கார்த்திக் – ஜெஸ்ஸி என்று கொண்டாடுகிறோம் என்றால் அந்த ஜோடிக்கு விதை போட்டது விக்ரம் குமார் தான்,

யாவரும் நலம் வெற்றியை தொடர்ந்து அதே 2009 – இல் இயக்குநர் விக்ரம் குமார் நடிகர் விக்ரமிடம் ஒரு Sci – fi Revenge Drama – விற்கான கதையை சொல்லி படம் ஓகேவாகி நம்ம நண்பனில் நடித்த அந்த டைம் பீக் நிலையில் இருந்த நடிகை இலியானாவை ஜோடியாக வைத்து படம் துவங்கப்பட இருந்த நிலையில் 2010 பிப்ரவரியில் படம் தொடங்கமாலே நிறுத்தப்படுகிறது, ஹாரிஸ் தான் அப்போது இசை அமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்,அப்போது வெளிவந்த தகவல் இயக்குநர் – தயாரிப்பாளர் – நடிகர் மூவருக்கும் உண்டான மாற்று அபிப்ராயம் காரணத்தினால் என்று,

பிறகு Ishq,Manam என்று இரண்டு தெலுங்கு படங்களுக்கு பின்னர் மீண்டும் தான் கைவிட்ட Sci – fi கதையை விக்ரம் குமார் மகேஷ் பாபுவிடம் கொண்டுபோனதாகவும், ஸ்கிரிப்ட்டை படித்த மகேஷ்பாபு முதல் பாதி மிகவும் பிடித்திருக்கிறது எனவும் இரண்டாம் பாதி கதையில் உடன்பாடு இல்லை என சொல்லியதாக NDTV – வெப்சைட்டுகளில் இருந்து பரவலாக நிறைய சினிமா வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்தன,

அப்போது தான் இந்த ஸ்கிரிப்ட் சூர்யாவின் கைக்கு வருகிறது,”Manam” படத்தின் ஹிட் குஷியால் விக்ரம் குமாருக்கு தெலுங்கு பக்கம் நல்ல மவுசு அதே நேரத்தில் அங்கு சூர்யாவுக்கும்,
புது முயற்சிகளை எப்போதும் வரவேற்கும் சூர்யா “24” ஸ்கிரிப்ட்டை கையில் எடுக்கிறார் தானே முன் வந்து படத்தை தயாரிக்கவும் செய்கிறார்,சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான்,திரு,நித்யா மேனன், சமந்தா,மதன் கார்க்கி,வைரமுத்து என பெரிய பேனரில் படம் துவங்குகிறது,அதே நேரத்தில் படம் தெலுங்கிழும் டப்பிங் செய்யப்படுகிறது,

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் சமந்தா நடித்த கேரக்டருக்கு முதலில் கேத்தரின் தெரசா தான் தயாரிப்பாளர் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் பின்பு கால்ஷீட் பிரச்சனை என்று நினைக்கிறேன் சமந்தா ப்ராஜெக்ட்டிற்குள் வந்தார்,அதுவும் இல்லாமல் அதற்கு முன்பு விக்ரம் குமார் தெலுங்கில் இயக்கிய ” Manam ” படத்தில் சமந்தா ஒரு நல்ல நடிப்பை கொடுத்திருப்பார் என்பதும் ஒரு கூடுதல் தகவல்,

பாடல்,டீஸர்,ட்ரைலர் என சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று படம் 2016 – இல் திரைக்கு வருகிறது,Sci – fi Revenge Drama அதிலும் தமிழ் ரசிகர்களுக்கு புதிதான “Time Travel ” Concept, ஆனால் ஒரு வெகு ஜன ரசிகனுக்கு கூட எளிதாக புரியும் அளவிற்கு விக்ரம் குமார் திரைக்கதையில் மெனக்கெடல் செய்திருந்தார், நிறைய அறிவியல் சார்ந்த நுணுக்கங்கள் படத்தில் இருந்தது,
நல்ல படங்களை நம்ம மக்கள் கொண்டாட மறந்து விட்டு மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு பிறகு தானே அது ஒரு காவியம் என்று தூசி தட்டுவோம் அதே கதை தான் 24 – க்கும்,
என்ன தான் பிரில்லியண்ட் மேக்கிங்,பிடிப்பான திரைக்கதை,நம்ம மக்களுக்கேற்ற கொஞ்சம் கமர்சியல்,சிறந்த இசையும் ஒளிப்பதிவும் என எல்லாமும் இருந்தாலும் நம்ம ஊரில் படம் எதிர் பார்த்த அளவு போகவில்லை,
தொடர் தோல்வி படங்களை கொடுத்துக்கொண்டிருந்த சூர்யாவிற்கு இது ஆவரேஜ் வரிசையில் முத்திரை குத்தப்பட்டது,ஆனால் தெலுங்கிலும் ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளிலும் படம் நல்ல வெற்றி என சொல்லப்படுகிறது,

ஒவ்வொரு இயக்குநருக்கும் நடிகருக்கும் தங்களின் Best Performance என சொல்லப்படும் படி ஒரு படம் இருக்கும், என்னை கேட்டால் சூர்யாவுக்கு வாரணம் ஆயிரம்,காக்க காக்க,சிங்கம்,அயன் என இருந்தாலும் 24 – ஆத்ரேயா கதாபாத்திரம் சூர்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவு ஒரு அசுரத்தனமான நடிப்பை கொடுத்திருப்பார்,என்னை கேட்டால் விக்ரம் குமார் பெருமையாக வெளியில் பீத்திக்கொள்ளலாம் இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டுக்கு புரிதலுடன் திரைக்கதை எழுதியதற்கே, நான் எழுதுனதிலேயே ” Best Written Script ” – னா இதான்னு அவ்வளோ வெயிட்டான ஒரு ஸ்கிரிப்ட்,

இப்படத்தின் Plot – ஐ சொல்லுவதற்கு பதில் ஒவ்வொரு சீன் பை சீன் ரசிச்சு பார்க்கும் அளவு ஒளிப்பதிவில் ” திரு ” – வும் இசையில் ரஹ்மானும் நமக்கு படையல் போட்டு விருந்தே அளித்து இருப்பார்கள்,இந்த படத்தை Theatre Experience – இல் பார்த்தவர்கள் வரப்பிரசாதம் வாய்ந்தவர்கள் என்றே சொல்லலாம்,

தமிழில் ஒரு உலக சினிமா வகையறா தான் “24” – ஒளிப்பதிவு, இசை, VFX,எடிட்டிங்,மேக்கிங்,ஸ்கிரிப்ட் என எல்லாவற்றிலும் ரசிகனுக்கு தீணி தான்,

இந்த படத்தின் எடிட்டர் பிரவின் புடி அவர்கள் ஒரு பேட்டியில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றி கூறியிருந்தார், 24 படத்தின் போஸ்டர்களில் Paraglider (Adventure Sports Person) லுக் – கில் சூர்யா இருப்பார், படத்தில் சேதுராமனின் மகனாக வரும் மணி “சூர்யா” பொழுது போக்கிற்காக Paragliding செய்வதாகவும் அதுவே மணியின் ஓப்பனிங் காட்சியாகவும் படத்தில் வரும் ஆனால் படத்தின் நீளம் கருதி நான் தான் கத்திரி போட்டுவிட்டேன் எடிட்டிங்கில் என்று சொல்லியிருந்தார், ” 24 Decoded ” என்று இரண்டாம் பாகம் விக்ரம் குமாரிடம் கதை இருக்கிறது அது வந்தால் சூர்யா நடித்த “Paraglider” சம்மந்தப்பட்ட காட்சிகள் அதில் Sequel – ஆக இடம் பெரும் என சொல்லி இருந்தார்,

படத்தில் இன்னொரு குறை என்னவென்றால் வைரமுத்து எழுதி ஹரிச்சரண் – சாஷா திருப்பதி இணைந்து பாடிய “புன்னகையே” பாடல் படத்தில் வராமல் போனது தான், ஒரு காதல் பாடல் தான் என்றாலும் வைரமுத்து அவர்கள் இந்த பாடலின் வரிகளில் சிரமம் எடுத்து எழுதியிருப்பார்,

அதிலும்,

இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானா..?

என்ற வரிகள் எல்லாம் வைரமுத்து அவர்களால் மட்டுமே கற்பனை செய்து எழுத முடியும்,

64 – ஆவது தேசிய விருது மேடையில்
Best Cinematography
Best Production Design – என்ற
இரண்டு தேசிய விருதை இந்தப்படம் தட்டி சென்றது,

எது எப்படியோ நாம் கொண்டாட மறந்த ஒரு பொக்கிஷம் ரகமான சயின்ஸ் மெட்டிரியல் தான் இந்த “24”,

AyushmaanBhava (May You Live Long)

Related posts

Matt Reeves shares First Look of Robert Pattinson as Batman

Penbugs

Aditi Rao Hydari to play the lead in bilingual film Maha Samudram

Penbugs

“மூக்குத்தி அம்மனாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா”

Kesavan Madumathy

Darbar movie update

Penbugs

Meet the man who ‘fixed’ Master fan art!

Penbugs

Silence Prime Video[2020]:An incoherently mediocre and a disturbingly poor writing makes it a repulsive watch

Lakshmi Muthiah

Viswasam motion poster released

Penbugs

The Classic Audrey Hepburn!

Penbugs

Not just tweeting: Aditi, Farhan, Kashyap hits Mumbai streets, joins CAA protest

Penbugs

காப்பான்| Tamil Review..!

Kesavan Madumathy

Dhanush’s Third Flick with Akshay Kumar|AtrangiRe

Penbugs

எந்திரன்…!

Kesavan Madumathy