Coronavirus

1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் – மத்திய அரசு..!

1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுத்து கொரோனா தொடர்பான ஆய்வினை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை உண்டாக்க வேண்டுமென்பதால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த ஊரடங்கு மே3 ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கைப்பேசியில் அழைப்பு விடுத்தால் காலர்ட்யூனாக கொரோனா விழிப்புணர்வு வாசகம் ஒலித்தல், பிரத்யேக செயலிகள் மூலம் கொரோனா பற்றி அறிதல் மற்றும் தடுத்தல் போன்ற பல நடவடிக்கைகளில் மத்திய அரசு இயங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது 1921 என்ற அழைப்பை விரைவில் மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் 1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுத்து கொரோனா அறிகுறி, பரவுதல் உள்ளிட்ட ஒரு ஆய்வினை எடுக்க முடிவு செய்துள்ளது.

இதற்கான அனைத்து செல்போன்களுக்கும் 1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி வேறு எண்ணில் இருந்து யாரேனும் பொழுதுபோக்கிற்காகவோ வேறு திட்டங்களுடனோ உங்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும் கவனமாக இருந்து அது போன்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டுமென்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதே வேளையில் அரசின் தொலைபேசி எண்ணான 1921ல் இருந்து அழைப்பு வந்தால், நலனை கருத்தில் கொண்டு இந்த ஆய்வுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும் அளிக்க வேண்டுமென்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

That was an emotional time: Williamson about WC 19 final

Penbugs

Former cricketer Sanjay Dobbal passes away due to COVID19

Penbugs

நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி-முதலமைச்சர்

Penbugs

Now you can order food through Instagram

Penbugs

Kamal Haasan collaborates with other artists for Arivum Anbum, lyrics out

Penbugs

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

Alyssa Healy disappointed to see India pulling out of England tour

Penbugs

COVID19: Shikhar Dhawan donates to Mission Oxygen

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

IPL 2020 might to happen outside India

Penbugs

New Zealand declared Coronavirus free, all restrictions lifted

Penbugs