Cinema

திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ: திரையுலகினர் அதிர்ச்சி

ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ திருமண மண்டபமாக மாறவுள்ளது என்ற தகவல் திரையுலகினர் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரனோ லாக்டவுன் காரணமாக சென்னையில் புகழ்பெற்ற அகஸ்தியா திரையரங்கு சமீபத்தில் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது‌.

இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் தற்போது ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ திருமண மண்டபமாக மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, ஏவிஎம் வளாகத்தில் ஒரு பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பு, ஒரு பகுதி மருத்துவமனை என்று மாறிவிட்டது.

இதற்கு காரணம் பலரும் ஹைதராபாத், வெளிநாடு, சென்னைக்கு வெளியே அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்புக்குத் திட்டமிடுவதால், இந்த கார்டனை திருமண மண்டபமாக மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கார்டனில் நடைபெற்ற கடைசிப் படப்பிடிப்பாக யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படம் அமைந்திருக்கிறது.

விரைவில் திருமண மண்டபமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கவுள்ளன.

கொரோனா லாக்டவுன் ஏற்கனவே திரைத்துறையினருக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் புகழ் பெற்ற திரையரங்குகள் , ஸ்டுடியோக்கள் மூடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ‌.

Related posts

Gully Boy is India’s entry to Oscar 2020

Penbugs

Much Needed: Kamal Haasan’s Arivum Anbum

Penbugs

In Pics: Celebrities & Christmas

Anjali Raga Jammy

Simbu’s Maanadu to go on floors soon!

Penbugs

Happy Birthday, Vijay

Penbugs

Marriage Story Netflix[2019]: A Heart-rending Tale of the Hardships in a Marriage That Reckons the Sufferings of the Broken Hearts

Lakshmi Muthiah

Mindy Kaling gives birth to a baby boy

Penbugs

Idhayam Movie | Rewind Review

Shiva Chelliah

Shalini wanted Ajith instead of Madhavan in Alaipayuthey!

Penbugs

10 Most Anticipated Tamil Films in 2020

Lakshmi Muthiah

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

Housefull 5 delivers chaos and cringe, but the joke on women isn’t funny anymore

Penbugs

Leave a Comment