Editorial News

உள் ஒதுக்கீடு மசோதாக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம் ஆறாயிரம் மருத்துவ இடங்களில் 500 இடங்கள் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இட ஒதுக்கீட்டை நடிகர் சூர்யா பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…

என்று கூறியுள்ளார்.

நீட் குறித்து ஏற்கனவே சூர்யா அவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு பெரிய ஆதரவு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தனது கருத்தினை நடிகர் சூர்யா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related posts

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

Kesavan Madumathy

Paris City Hall fined for having too many women in top jobs

Penbugs

Mumbai on hold due to major power failure

Penbugs

The captain’s go-to bowler-Neil Wagner

Penbugs

WhatsApp pay available for users in India from today

Penbugs

Happy Birthday, Ellyse Perry

Penbugs

Cristiano Ronaldo told to put on a mask as he watched Portugal defeat Croatia 4-1

Penbugs

சென்னை புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 24ல் தொடக்கம்

Kesavan Madumathy

Cologne Boxing World Cup: India end with 9 medals, including 3 Gold medals

Penbugs

மதுரையில் தன் மகனுக்கு மெழுகுச்சிலை ; தந்தை உருக்கம்

Penbugs

Complete list of 2020 International Emmy Awards

Penbugs

Paytm removed from Google Playstore for violations

Penbugs

Leave a Comment