நாடு முழுவதும் மக்கள் வாழ சிறந்த நகரம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் சென்னைக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது என்பது குறித்து ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இதை நடத்துகிறது. இந்தாண்டில், நாடு முழுவதிலும் இருந்து 111 நகரங்கள் இந்த ஆய்வில் இடம் பெற்றன.
இதில் முதல் பத்து இடங்களை பிடித்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு, புனே, அகமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோயபுத்தூர், வதோதரா, இந்தூர், மும்பை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நாட்டின் தலைநகரமான டெல்லி, 13வது இடத்தை பிடித்துள்ளது.
Twitter introduces new ‘fleets’ feature in India