கேபியின் பேபி …!
இந்திய சினிமா நூறாண்டு கடந்து ஓடிக் கொண்டிருக்கும்போது அதில் அறுபது ஆண்டுகளாக ஒரு தனிமனிதனும் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக ஓடிக்கொண்டிருப்பது என்பது வியக்க தகுந்த ஒன்று..!
வெறும் நடிப்பில் மட்டும் ஓடினாலே பெரிய விசயம் ஆனால் இவர் நடிப்பு , தொழில்நுட்பம் , தமிழ் என எல்லாவற்றையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சித்து கொண்டிருக்கும் ஒரு உன்னத கலைஞன்…!
கேபி இவரை வைத்து மட்டும் நிறைய படங்கள் தந்ததன் காரணம் அவரின் எழுத்தின் வலிமைக்கு தீனி போட கலைஞானியால் மட்டுமே முடியும் என்பதால்தான்..!
அறுபது வருட சாதனைகள் அனைத்தும் சொன்னால் அது ஒரு நீண்ட கட்டுரை என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு அவரின் சாதனைகள் உள்ளது ..!
புன்னகை மன்னன் வெற்றி விழாவில் ரஜினி கூறியது ” கமல் நடிகர்களின் நடிகன் அதாவது மகா நடிகன் ” என்று கூறியதே கமலின் ஆளுமையை காட்டுகிறது…!
கமல், முழு நேர பாடகராக இருந்து இருந்தால் என் மாதிரி பாடகர்களை சாதரணமாக கடந்து போய் இருப்பார் என பாடகர் ஜேசுதாஸ் கூறியது ..!
கமல், ஒரு துறையில் இறங்கினால், அந்த துறையின் அ முதல் ஃ வரை அனைத்தும் கற்று கொள்வான் அவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பாரதிராஜா கூறியது ..!
இவையெல்லாம் கமலின் ஆளுமையை சிறப்பினை கூறுகிறது ஏனெனில் கூறியவர்கள் அனைவரும் அந்த அந்த துறையில் வல்லுநர்கள் ..!
ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கமலின் விடைதான் அவரின் உயரத்தை பறைச்சாற்றுகிறது ..!
கேள்வி : ஏன் எப்போதும் புதிய முயற்சிகளை செய்து கொண்டிருக்கீர்கள் ..?
கமலின் பதில் : வெறும் வர்த்தக ரீதியான படங்களை எடுக்க நினைத்தால் வருடத்திற்கு பன்னிரெண்டு படம் தர இயலும் ஆனால் அதற்கு எதுக்கு கமல்ஹாசன் என்ற கேள்வியே என்னை ஓட வைத்து கொண்டிருக்கிறது என்பதே ..!
கமலின் நடிப்பிற்கு பல சான்றுகள் உள்ளன ஒன்றை மட்டும் இங்கே நினைவு கூறுகிறேன் .
அன்பே சிவம் படப்பிடிப்பில் கமல் அணிந்த கண்ணாடி – 10 அளவிற்கான கண்ணாடி சாதரண நபர் அதனை அணிந்தால் காட்சிகளை சரி வர காண கூட இயலாது ஆனால் கமல் எத்தகைய பிரச்சினையும் இன்றி நடித்து கொண்டிருந்ததை பார்த்த மாதவன் உள்ளிட்ட பிற நடிகர்கள் எப்படி அவரால் முடிகிறது என யோசித்துக் கொண்டிருக்க ஒரு உதவி இயக்குனர் சொன்னது சார் அவர் +10 அளவிற்கான லென்ஸை தன் கண்ணில் வைத்து -10 அளவிற்கான கண்ணாடியை முகத்தில் அணிந்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதே ..!

இதுதான் பூரணத்துவம். தான் காதல் கொண்ட கலை மீது கொண்ட தாகம் இந்த மனிதனை பரிச்சார்ந்த முயற்சிகளை தொடர்ந்து செய்ய தூண்டிக் கொண்டே இருக்கிறது ..!
கமலின் அரசியல் பிரவேசம் அரசியலுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம் ஆனால் இந்திய சினிமா ஒரு நல்ல ஆத்மார்த்தமான கலைஞனை இழக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை..!
உலக நாயகனின் கலை வாழ்க்கையில் அறுபது ஆண்டுகள் ..!
வாழ்த்துக்கள் ஆண்டவரே…!