படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகறதுக்கு முன்ன பிரிவியூ ஷோ பார்த்த ஒருத்தர் என்கிட்ட சொன்னது படம் நல்லாவே இல்லை மலையாளப் படம் மாதிரி இருக்குனு ஆனா அவர் சொன்ன அந்த வார்த்தை தான் என்ன ரொம்பவே எதிர்பார்ப்பை தூண்டிச்சு…!
மலையாள சினிமாவில் ஒரு அழகியல் எப்பவுமே இருக்கும் மண்ணின் வாசம் , கதை மாந்தர்கள் தேர்வு என்று ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கும் படங்கள் வருவது மலையாள சினிமாவில் இருந்துதான் அது மாதிரிதான் இருக்கும் என்று படத்தின் மீதான உச்சபட்ச எதிர்பார்ப்பு அதிகம் ஆகிடுச்சு..!
பட ரிலீஸுக்கு முன்ன 96 படத்தின் இயக்குனர் பிரேமின் எல்லா யூ டீயூப் பேட்டிகளையும் பார்த்து ரொம்பவே ரசிச்சேன் அவரின் பேச்சு ஒரு யதார்தத்தை மீறாம சக மனிதனின் பிரதிபலிப்பாக மட்டுமே இருந்தது அவர் படத்தை எப்படி எடுத்து இருப்பார் என்ற கற்பனையும் அதிகமானது ..!
கோவிந்த் வசந்தா :
காதலே காதலே பாடல் பட்டி தொட்டி எங்கும் இன்ஸ்டாண்ட் ஹிட்டாக கோவிந்த வசந்தாவின் மீதும் ஒரு சிறிய எதிர்பார்ப்பு ..!
வெறும் எலக்ட்ரானிக் இசையாக மாறிப்போன இந்த காலகட்டத்தில் படம் முழுதும் புல்லாங்குழல் இசையை மெல்லியதாக ஓட விட்டு இருப்பார் மிகச்சிறந்த பின்னணி இசையை தான் படத்தை தூக்கி நிறுத்தும் அதை மிகவும் சிறப்பாகவே கையாண்டு இருந்தார் கோவிந்த் வசந்தா …!
கார்த்திக் நேத்தா :
இந்த ஆளை பத்தி என்ன சொல்ல என்னை பொறுத்தவரை முத்துகுமாரின் இழப்பை ஈடு செய்ய ஒரு ஆள் என்றால் இப்போதைக்கு இவர்தான் ..!
வார்த்தை சொல்லாடல் ரொம்பவே அழகா இருக்கும் …!
“கொஞ்சும் பூரணமே வா நீ
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி”
“இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா”
இந்த வரிகள் எல்லாம் மனுசன் எப்படிடா இவ்ளோ சாதரணமாக சொல்லிட்டு போய்ட்டார்னு இருக்கும் ஒரு பெரிய ரவுண்ட் வர வேண்டும் இவர் ஜெயிக்கலான வேற யாரை ஜெயிக்க வைக்க போறோம் என்று தெரியவில்லை …!
சின்மயி :
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் இவங்கதான் பாட்டு அவங்க நல்லா பாடுவாங்கனு நான் சர்டிபிகேட் தர்ற வேணாம் ஆனா டப்பிங் பின்னி பெடல் கண்ணை மூடிக் கேட்டா சின்மயி தான் ஜானுவா ஒரு கணம் வந்து போவாங்க வழக்கமா பின்னணி குரல் எல்லாம் எந்த படத்துலயும் நாம கண்டுக்க மாட்டோம், ஆனா இந்த படத்துல அதை பற்றி பேசுகிறோம் என்றால் அதுவே அவங்களின் வெற்றி …!
திரிசா :
மங்காத்தாவில் அஜித் ஒரு வசனம் சொல்லுவார் ப்பா நீ எப்பேர்ப்பட்ட நடிகைனு அப்ப அதை கேட்கும்போது எனக்கு அது கொஞ்சம் மிகையான வசனமோனு தோணிச்சு ஆனா 96 படத்துல திரிஷாவின் நடிப்பை பார்த்து மிரண்டு போனதுதார் நிஜம் . கண்ணுல அந்த ஏக்கம் , சோகம் ,காதல் எல்லாமே காட்டி அசத்தி இருப்பாங்க …!
விஜய் சேதுபதி : படம் பொருளாதார சிக்கல்களை சந்தித்த போது தன் சம்பளத்தில் ஒரு பாதியை கொடுத்து படத்தை வெளியிட வச்சார் அதுக்கே அவருக்கு நன்றி சொல்லனும் ..!
நடிப்பை எப்பயும் தனக்கு என்ன வருமோ அதை மட்டும்தான் பண்றது அவரோட பிளஸ் இதுல இரண்டு இடத்துல ரொம்ப வியந்து பார்த்தேன்
1.ரூம் நம்பர் கேட்கற இடம்
2.சர்வர் காபி எடுத்துட்டு வர்ற இடம்
அந்த சீன்லாம் நடிக்க ஸ்கோப் இல்லாத இடம் ஆனாலும் மனுசன் தன் மேனரிசத்தில் ஸ்கோர் பண்ணி இருப்பார் …!
பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது :
நடிகர் : விஜய் சேதுபதி
நடிகை : திரிசா
இசை : கோவிந்த் வசந்தா
பாடல் : கார்த்திக் நேத்தா
பாடகி : சின்மயி
அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் இயக்குனருக்கு நன்றிகள் ..!
Hrithik-Kangana case to be investigated by Crime Branch