Editorial News

ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மகால் மீண்டும் திறப்பு

ஆறு மாதங்களுக்குப் பிறகு தாஜ்மகால் சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்காக மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 17- ஆம் தேதி தாஜ்மகால் மூடப்பட்டது.

தற்போது ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து அன்லாக்-4 என்ற அடிப்படையில் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது .

இந்நிலையில் செப்டம்பர் 21-ந்தேதியில் இருந்து சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால் திறக்கப்படுகிறது.

தாஜ்மகால் வருபவர்கள் சமூக இடைவெளி, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலை காண வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், ஆன்-லைன் மூலம் டிக்கெட் வாங்க வேண்டும், டிக்கெட் கவுண்டர் திறந்திருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலை பார்வையிட ஒரு நாளைக்கு 5000 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

மதியம் 2 மணிக்கு முன்பு 2500 பேரும், அதற்குப்பின் 2500 பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Bigg Boss Tamil 4, Day 75, Written Updates

Lakshmi Muthiah

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

Power shutdown in part of Chennai on October 8

Penbugs

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கேப்டன் விஜயகாந்த் போட்டியிடவில்லை

Kesavan Madumathy

Jehan Daruvala becomes 1st Indian to win F2 race

Penbugs

பிரபல நடிகை விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைந்தார்

Kesavan Madumathy

2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

Penbugs

“This is what I want for my birthday” PM Modi writes

Penbugs

ECS T10 Brescia 2021- Full Teams Squad, Fixtures, Timings, Venue Details, and Live Streaming

Anjali Raga Jammy

The captain’s go-to bowler-Neil Wagner

Penbugs

போர்க் கப்பல் குழுக்களில் முதன்முறையாக இணைந்த பெண்கள்

Penbugs

தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Penbugs

Leave a Comment