Cinema

அவன்தான் பாலா – இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் பாலா

அவன்தான் பாலா ….!

பாலா என்ற தனிப்பட்ட மனிதன் மீதான இமேஜ் அவர் ஒரு சைக்கோ , ரொம்ப முரடன் , கோபக்காரன் என்று நாம சோசியல் மீடியாவில் பேசிட்டு போய்டலாம்.

பாலா தனது வாழ்க்கையின் பாதியை
” இவன்தான் பாலா” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் அதை ஒருமுறை படித்து பார்த்தால் பாலாவை நாம் பார்க்கும் கோணம் முற்றிலும் சிறிதளவாவது மாறும் .

பாலாவின் மீதான பிரதான விமர்சனம் ஏன் வாழ்வியலின் கருப்பு பக்கங்களை மட்டும் ஏன்‌ காட்டுகிறார் ?
எந்த ஒரு இயக்குனரும் தான் சந்தித்த வாழ்வியலைதான் படம் எடுக்க முனைகிறார்கள் பாலாவின் ஆரம்ப காலங்கள் வார்த்தையில் விவரிக்க இயலாத நெருடல்களை கொண்டது அதிலிருந்து வந்த மனிதன் பார்க்கும் கோணம் அவ்வாறாக இன்றி வேறு எவ்வாறகா இருக்கும் .

இவன்தான் பாலாவின் முதல் வரி

” பிறந்தபோதே இறந்து போயிருக்க வேண்டிய சவலப்பிள்ளை நான் “

எட்டாம் வகுப்பில் கஞ்சா அடித்ததை போகிற போக்கில் சொல்லிவிட்டு போவது பாலாவின் ஸ்டைல் அவர்‌ வாழ்க்கையில் ஒளிவு மறைவு இல்லை யாருக்கும் அவர் பயப்படுவதும் இல்லை தனக்கு என்ன மனதில் படுகிறதோ அதை வெளிப்படையாக அது தனது குருநாதர் பாலு மகேந்திராவாகவே இருந்தாலும் பேசுவதுதான் பாலா‌.

Read: https://penbugs.com/20-years-of-chiyaan-sethu-vikram/amp/

கவிஞர் அறிவுமதியின் மூலம் பாலு மகேந்திரா உலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பாலாவிற்கு பாலுமகேந்திராவும் , அவரது மனைவி அகிலா அம்மாவும்தான் உலகம் அந்த உலகத்தில் இருந்து பாலா பார்த்த உலகம் அழகானது .

பாலு மகேந்திராவிடம் தொழில் கற்றுக்கொண்டு , அவரிடமே சண்டை போட்டு பாலா தொடங்கிய படம் அகிலன் வழக்கம்போல் பாலாவிற்கு அதுவும் எளிதாக இருக்கவில்லை எத்தனை எத்தனை தடங்கல்கள் அதை தாண்டி அதை” சேது “என‌ பெயர் மாற்றி படமாக எடுத்தார்.

அகிலனாக கதை தொடங்கிய இடம் அறிவுமதியின் கவிதை தொகுப்பில் ஒரு கவிதை

” அணு அணுவாய் சாவதற்கு முடிவெடுத்த பின் காதல் ஒரு சரியான வழிதான் “

இந்த கவிதையிலிருந்தும் , சக நண்பனின் ஒருவரின் வாழ்வையும் இணைத்து சேதுவாக எடுத்த படத்தை வாங்க ஆள்‌ இல்லை , விநியோகஸ்தர்கள்‌ பலரும் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றுங்கள் என அறிவுரை சொன்ன போதும் அதற்கு பாலாவின் பிடிவாதம் இடம் கொடுக்கவில்லை முதல் படம் வேறு அனுசரித்து போகலாம் என்பதுலாம் பாலாவிடம் வேலைக்கு ஆகவில்லை, தன்னுடைய படைப்பு எப்படி வெளி வர வேண்டும் என முடிவு என் கையில் மட்டுமே என்று தீர்க்கமாக இருந்தார் அதுதான் பாலா.

படத் தயாரிப்பாளரிடம் நீங்களே படத்தை ரிலீஸ் செய்யுங்கள் எத்தனை பத்திரத்தில் வேண்டும் என்றாலும் நான் கையெடுத்து இடுகிறேன் இந்த படம் நிச்சயம் ஓடும் என்று கூறி படத்தை வெளியிட்டார் .

படம் வெளியான முதல் வாரம் தியேட்டரில் கூட்டமில்லை அதற்கு பிறகு விகடன் விமர்சனம் வந்த பின் கூட்டம் அலைமோதி படம் வெற்றிபெற்றது .ஒரு‌வேளை கிளைமேக்ஸ் மாற்றி இருந்தால் பத்தோடு ஒரு காதல் கதையாக மாறியிருக்கலாம் இன்று வரை சேதுவை பேச வைப்பது பாலாவின் திரையாக்கமே.

கதைக்களங்களை எங்கு தேர்வு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு பாலா கூறிய பதில் எல்லாரும் பார்க்கும் கோணத்தை விட‌ இன்னொரு பக்கத்தில் உலகத்தை ரொம்ப உற்று நோக்க ஆரம்பித்தால் போதும் கதைகள் பிறக்கும்.

அடுத்த படம் நந்தா இலங்கை அகதிகள் பற்றிய‌ படம். சூர்யாவை நடிப்பில் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்ற படம் ராஜ்கிரண் ரோல் முதலில் சொல்லப்பட்டது சிவாஜி , சிவாஜியின் உடல்நிலை ஒத்து வராததால் அது கை நழுவி போனது. சிவாஜியிடம் கதை சொன்னது தன் வாழ்நாளில் ஒரு‌ முக்கியமான நிகழ்ச்சி என பாலா குறிப்பிடுவார். பாலாவின் நேர்மையை இங்கு சொல்ல வேண்டும் என்றால் படம் ஏன்‌ தோற்றது என்ற கேள்விக்கு முழு தோல்விக்கும் நான்தான் காரணம் சூர்யா மற்றும் அவரின் தாயார் சென்டிமென்ட்டை அந்த அளவிற்கு நான் ஆடியன்ஸிடம் சேர்க்கவில்லை என்று‌ ஒப்புக் கொண்டது அவரின் தைரியம்.

முதல் பட நாயகனையும் , இரண்டாவது பட நாயகனையும் வைத்து மூன்றாவதாக எடுத்த படம் பிதாமகன் , தமிழ் சினிமாவில் காட்டப்படாத கதைக்களம் படம் தேசிய விருதோடு , கமர்சியல் வெற்றியையும் பெற்று தந்தது.

அடுத்து நான் கடவுள் , என்னை பொறுத்தவரையில் பாலாவின் சிறந்த படம் என்றால் அது நான் கடவுள் தான்‌ . ஏழாவது உலகம் நாவலை தழுவியும் , பாலா சந்தித்த சில அகோரிகளையும் வைத்து பாலா செதுக்கிய சிற்பம் நான் கடவுள் .

தன்னை பற்றி விவரிக்கும்போது ஒரு‌ இடத்தில் பாலா கூறியது

” உலகத்தை வெறுத்த சாமியார்களும் , உலகம் வெறுக்கும் பிச்சைக்காரர்களும் இருக்கும் இடம் தெப்பக்குள‌ மண்டபம் நான் அங்குதான் இருப்பேன் ; அவர்களும் நானும் வேறில்லை “

நான் கடவுளுக்கான கதைக்கருவும் அவர் வாழ்வின் வழியே வந்ததுதான்.

நான் கடவுளுக்கு பிறகான கதைக்தேர்வுகள் விமர்சன ரீதியாகவும் , வர்த்தக ரீதியாகவும் பெரும் விவாதங்களை எழுப்பி வருகின்றன.

பாலாவும் சர்ச்சையும் கூடவே பிறந்தது ஆனாலும் இதுவரை தன்னுடைய புதிய கதைக்களங்களுக்கான தேடலை பாலா நிறுத்தியதே இல்லை . குற்றபரம்பரை நீண்ட நாளாக கிடப்பில் உள்ள படம் அதை பாலாவின் இயக்கத்தில் விரைவில் காண வேண்டும்.

பலர் எதிர்பார்க்கும் ஐந்து பாடல் , ஆறு‌ சண்டை காட்சி , நான்கு இரட்டை அர்த்த காமெடிக்கு படம் பண்ண இங்கே ஆயிரம் பேர் உண்டு .ஆனால் விளிம்பு நிலை மக்களின் இருண்ட பக்கங்களுக்கும் ஒரு‌ மதிப்பு உண்டு என்று பாலா தன் கதைகளின் வாயிலாக தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டே இருக்கிறார் .

தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த ஒரு‌ படைப்பாளிக்கு இன்று‌ பிறந்தநாள்….!

Related posts

Why I loved CCV

Penbugs

Jyotika’s Ponmagal Vandhaal to have direct online release

Penbugs

Glittering Nayanthara Bags Two Awards | Zee Cine Awards 2020

Penbugs

Kousalya Khartika becomes first crorepati of Kodeeswari

Penbugs

Trailer of Laxmmi Bomb is here!

Penbugs

Yashika Aannand’s car rams over a man in Nungambakkam

Penbugs

ராக்ஸ்டார்…!

Kesavan Madumathy

Maha New Poster | STR birthday Special

Penbugs

Malavika Mohanan’s Stunning Photoshoot | Penbugs

Anjali Raga Jammy

Friends reunion to air on May 27, with bunch of celebrity guests

Penbugs

1st look of Tughlaq Darbar is here!

Penbugs

Leave a Comment