Penbugs
Cinema

கேப்டன் விஜயகாந்த்…!

விஜய்காந்த் என்றால் தைரியம். சினிமா ஆகட்டும் , அரசியல் ஆகட்டும் கேப்டனுக்கு சமகால போட்டியாளர்கள் அனைவருமே ஜாம்பவான்கள். திரையில் ரஜினி , கமல் உச்சத்தில் இருக்கும்போதும், அரசியலில் ஜெயலலிதா , கலைஞர் என்ற இரு ஆளுமைகளையும் எதிர்த்து தன் கால்தடத்தை பதித்தவர் கேப்டன்…!

எதிர் அணியில் இருப்பவர்களும் கேப்டனின் கொடை தன்மையை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள் ஏனெனில் அவர் செய்த உதவிகள் ஏராளம். எழுபது , எண்பதுகளில் கேப்டனின் வீட்டு அடுப்பு எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்குமாம் எத்தனையோ துணை நடிகர்கள் , உதவி இயக்குனர்களுக்கு படி அளந்த இடம் கேப்டனின் வீடு…!

சட்டம் ஒரு இருட்டறையில் இருந்து திரைப்பயணத்தில் தன் சாட்டையை சுழற்ற ஆரம்பித்த கேப்டனுக்கு எந்த கதாநாயகனுக்கும் இல்லாத ஒரு பெருமை உள்ளது. நூறாவது படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ஒரே தமிழ் ஹீரோ கேப்டன்தான் அந்த படம் கேப்டன் பிரபாகரன் ..!

அதிகமாக நேர்மறையான கதாப்பாத்திரங்கள் , அதிலும் காவல் அதிகாரியாகவே பல திரைப்படங்களில் தோன்றி கேப்டன் என புகழப்பெற்றார்..!

புகழின் உச்சத்தில் இருக்கும்போதே திரைப்பட கல்லூரி இளைஞர்களின் கனவுகளுக்கு தன் மூலமாக திருப்பத்தை தந்தவர் கேப்டன் அந்த கால கட்டத்தில் திரைப்பட கல்லுாரி மாணவர்களிடம் அதிகம் கதைகள் கேட்டது கேப்டன் மட்டுமே..!

தனது ரசிகர்களை நல்வழிப்படுத்தி மக்களுக்கு தொண்டுகள் ஆற்றச் செய்தவர் அது மட்டுமின்றி தன் திருமணத்தையே ரசிகர்கள் முன்னால் நடத்தி கொண்டவர் ..!

அதிகமான கோபம் வருவதாக ஒரு எதிர்மறை விமர்சனம் உண்டு ஆனால் அவர் அன்று எதற்கெல்லாம் கோபப்பட்டாரோ அவை அனைத்தும் சரி என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் ..!

நாம் திரையில், பொதுகூட்டங்களில் பார்த்த ஒரு ஆளுமை தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருப்பது வருத்தத்திற்கு உரியது அவர் ஆரோக்கியமான உடல்நலத்துடன் இருந்தால் போதும் நல்லா இருங்க கேப்டன்…!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த்…!

Related posts

Yours Shamefully-The Review

Penbugs

Hope in human race is deteriorating: Sai Pallavi

Penbugs

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் – ரகுமானின் வேண்டுகோள்

Kesavan Madumathy

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

Watch: Sarvam Thaala Mayam teaser here!

Penbugs

Crazy Mohan dies at 67!

Penbugs

Paravai Muniyamma is critically ill!

Penbugs

Rowdy Baby Video song is here!

Penbugs

Power Ranger Ninja Storm Red Ranger actor dies at 38!

Penbugs

If I’m accepted as Jayalalithaa, I want to do a film on Kannagi next: Kangana Ranaut

Penbugs

மயில் | Mayil

Kesavan Madumathy

Happy Birthday, Sai Pallavi

Penbugs