தமிழகத்தில் புதிதாக 2,089 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,77,279ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 775, செங்கல்பட்டில் 186, கோவையில் 185, திருவள்ளூரில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,659ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று 84,759 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
