Penbugs
CricketMen Cricket

சின்ன தல…!

இந்திய அணியில் சின்ன‌ வயதிலயே வருவது என்பது புதிது அல்ல ரெய்னா இந்திய அணிக்கு அறிமுகம் ஆகும்போது அவரின்‌ வயது 19…!

தோனி அலை பெரிதாக வீசிக் கொண்டிருந்த 2005ல் அறிமுகமானாலும் தன்னுடைய பீல்டிங் திறமையால் சிறிது கவனிக்க வைத்தார் இளம் வீரர்களுக்கு இருக்கும் அந்த துடிப்பும் , சுறுசுறுப்பும் இன்று வரை ரெய்னாவிடம் இருப்பது அவரின் மிகப்பெரிய பிளஸ்‌‌…!

அப்போது இருந்த Super sub முறையை சிறப்பாக பயன்படுத்தி தன்னுடைய திறமையை இந்த உலகிற்கு காண்பித்தார்…!

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம்‌ அடித்த முதல் இந்திய வீரர் , தன்னுடைய முதல் டெஸ்ட்டில் சதம் அடித்த வீரர் என பல பெருமைகளுக்கு சொந்தகாரர்…!

யார் விக்கெட் எடுத்தாலும் முதலில் ஓடி வந்து பாராட்டுவது , பீல்டிங்கின் மூலம் முடிந்தவரை ரன்களை கட்டுபடுத்துவது என பம்பரமாக சுழல கூடியவர் ரெய்னா உலகின் தலைசிறந்த பீல்டரான ரோட்ஸ் சுரேஷ் ரெய்னாவின் பீல்டிங் உலக தரத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்..!

ரெய்னா மீது வைக்கப்படும் பெரிய விமர்சனம் ஐபிஎல்லில் மட்டும் ஜொலிக்கிறார் என்பது ஆனால் இந்திய அணி உலக கோப்பை வெல்ல ரெய்னாவின் பொறுப்பான இரு ஆட்டங்கள் முக்கியமானது …!

1.ஆஸ்திரேலியாவுடனான கால் இறுதி போட்டி
2.பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி போட்டி

இந்த இரண்டு ஆட்டங்களில் ரெய்னா ஆட்டத்தை இறுதி வரை கொண்டு செல்லாமல் இருந்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம் …!

சச்சின் தனது சுயசரிதையில் ரெய்னா பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த அந்த 36 ரன்கள் எவ்வளவு முக்கியம் என்று குறிப்பிடும் அளவிற்கு அவரின் பங்களிப்பு இருந்தது ..!

ஒவ்வொரு பிளேயருக்கும் சில காலம் மாஸ் மூவ்மெண்ட் வரும் அப்படி பட்ட மாஸ் மூவ்மெண்ட் ரெய்னாவிற்கு ஐபிஎல்லில் சென்னை அணியில் விளையாடியதின் , விளையாடி கொண்டுருக்கும் மூலம் கிடைத்துள்ளது “சின்னதல “என்று அன்புடன் அழைக்கும் தமிழ் மக்கள் சென்னை அணியையும் ரெய்னாவையும் அந்த அளவு கொண்டாடி வருகின்றனர் ..!

எனது இரண்டாவது இல்லம் சென்னைதான் என அவரும் குறிப்பிட்டுள்ளார்…!

Mr.IPl என அழைக்கப்படும் அளவிற்கு சென்னை அணியில் அவரின் பங்களிப்பு அதிகம் துணை கேப்டானகவும் , ஒன் டவுன் பிளேயராகவும் , சிறந்த பீல்டராகவும் , பகுதி நேர பந்து வீச்சாளராகவும் தனது ஆல்ரவுண்ட் திறமையை பயன்படுத்தி பல வெற்றிகளை ஈட்டி தந்துள்ளார் சின்னதல …!

2014 பஞ்சாப்புடனான போட்டியை சொல்லாமல் ரெய்னாவின் பாராட்டு கட்டுரையை எழுத இயலாது சேவாக்கின் அதிரடியில் 226 ரன்கள் குவித்தது பஞ்சாப் சென்னையின் துவக்க ஆட்டமும் மோசமாக அமைந்த நேரத்தில் புயலென வந்து ஒரு சூறாவளியாய் சுழற்றி போட்டது ரெய்னாவின் இன்னிங்ஸ் 25 பந்துகளில் 87 ரன்கள் 12 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என ஒட்டு மொத்த உலகமே வியந்து பார்த்த ஒரு தரமான சம்பவம் …!

கடந்த சில வருடங்களாக தேசிய அணியில் இடம் பெறாமலும் , ஐபிஎல்லிலும் அந்த அளவிற்கு ஆடாமாலும் இருந்து வரும் ரெய்னா இந்த ஐபிஎல்லில் நன்றாக ஆட வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உள்ளது …!

Related posts

சின்ன தலயின் ரீ எண்ட்ரி!

Shiva Chelliah

கலியுக தர்ம யுத்தம்!

Shiva Chelliah

என்னை அறிந்தால்!

Shiva Chelliah

You should be back in the team: Rohit Sharma to Raina

Penbugs

When Rayudu had to leave field due to upset tummy

Penbugs

We will try to come back strong: MS Dhoni after SRH match

Penbugs

We hugged and cried a lot: Suresh Raina opens up about retirement

Penbugs

Watch: Sreesanth’s spell during Syed Mushtaq Ali warm-ups

Penbugs

This is longest preseason practice MS Dhoni ever had, says Balaji ahead of IPL2020

Penbugs

These things happen: Rohit Sharma’s advice to Rishabh Pant

Penbugs

There are too many holes in the ship: MS Dhoni about the team after loss against RCB

Penbugs

Team balance will get better once Rayudu comes back: MS Dhoni

Penbugs