Penbugs
Coronavirus

கொரோனா பாதிப்பு தமிழகத்தை விட்டு விலகிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது . இந்தியாவிலும் கொரோனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது …!

தமிழகத்திலும் ஊரடங்கு மிகத் தீவிரமாக பின்பற்றி வரும் நிலையில் வரும் ஞாயிற்று கிழமையுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது . ஏற்கனவே சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது ‌‌.

தற்போது பள்ளி கல்லூரிகள் திறப்பு பற்றி உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு ;

கொரோனா பாதிப்பு என்றைக்கு தமிழகத்தை விட்டு விலகுகிறதே அன்றைக்கு கல்லூரிகளை திறக்கவும், தேர்வுகளை நடத்தவும் தயார் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

தருமபுரியில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்லூரிகள் தற்போது தனிமைப்படுத்தப்படும் மையங்களாக மாற்றப்பட்டிருப்பதால் பாதிப்பு குறைந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே மாணவர்களை அனுமதிக்க முடியும் என்றும், கல்லூரிகள் திறப்பு விவகாரத்தில் அரசு சரியான தீர்வோடு இருப்பதாகக் கூறினார்.