Cinema

Darbar Movie Review | Penbugs

ஆக்சன் ஹீரோ ஆக வேண்டும் என்றாலே அப்ப அப்ப போலிஸ் படத்தில் நடிப்பது என்பது ஒரு எழுதப்படாத விதி ஆனால் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான தலைவர் மட்டும் விதிவிலக்கு ..!

மூன்று முகம் , பாண்டியன் ,நாட்டுக்கொரு நல்லவன் , அன்புக்கு நான் அடிமை என்று குறைந்த அளவிற்கான படம் மட்டுமே அவரின் தேர்வாக இருந்துள்ளது …!

ஒரு பேட்டியில் ஏன் போலிஸ் கேரக்டர் அதிகமாக தேர்வு செய்யவில்லை என்ற கேள்விக்கு அது ரொம்ப கட்டுகோப்பா இருக்க வேண்டி இருக்கும் நான் ரொம்ப கேசுவலா இருந்தால்தான் என் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று சூப்பர்ஸ்டார் கூறியிருந்தார் அந்த மைண்ட் செட்டில் இருந்த சூப்பர்ஸ்டாரை முருகதாஸ் தனது கதை சொல்லும் உத்தியில் திருப்திபடுத்தி இருப்பது ஆச்சரியம் …!

அனிருத் , சந்தோஷ் சிவன் , ஸ்ரீகர் பிரசாத் , ராம் லஷ்மண் , பீட்டர் ஹெயின், நயன்தாரா என்று ஒரு பெரிய திரை ஆளுமைகளோடு முருகதாஸூம் , ரஜினிகாந்த்தும் முதல் முறையாக இணையும் படம் தர்பார் ….!

படம் முழுவதும் ரஜினிபைடுதான்..! ஒவ்வொரு பிரேமும் ரஜினி ப்பா அப்படி இருக்கார் மனுசன் இந்த வயசுல என்ன ஒரு எனர்ஜி ஒட்டு மொத்த படத்தையும் தனி ஆளா சுமந்துட்டு இருக்கார்.
சினிமாவை பொறுத்தவரை என்னைக்குமே ராஜா அவர்தான் அது அவரா அந்த சீட்டை விட்டு எழுந்தா கூட வேற யாரும் பிடிக்கவே முடியாது …!

படத்தின் இரண்டாவது ஹீரோ அனிருத் மனுசன் அப்படி வேலை பார்த்து இருக்கார் நாடி நரம்பெல்லாம் ரஜினி ரசிகனா இருந்தா மட்டும்தான் இப்படிலாம் ரசிச்சு ரசிச்சு பண்ண முடியும் .டைட்டில் கார்டில் தேவா இசையில் இருந்து அனிருத் இசைக்கு மாறும்போது தியேட்டரே அதிருது. இடைவேளையில் வர்ற பிஜிஎம்லாம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களுக்கே ஒரு கூஸ்பம்ப் மொமண்ட்தான் வாழ்த்துக்கள் அனிருத் ….!

யோகிபாபு ஒன் லைனர்லாம் வொர்க் அவுட் ஆகி இருக்கு . ரஜினி பெருந்தன்மையா சில இடம் கொடுத்தது பாராட்டப்பட வேண்டிய விசயம்…!

ரஜினி : பெரியவங்களை கேட்கனும்
யோகிபாபு : யாரு உங்கள விட பெரியவங்கனா அது
போதி தர்மர் தான் ..!

இது போன்று அங்க அங்க சில ஒன்லைனர்லாம் நல்லா இருக்கு தியேட்டரில் கைதட்டல் இருக்கு …!

முருகதாஸின் எழுத்து மற்ற படங்களை மாதிரி இல்லாமல் முழுக்க ஒரு ரஜினி படமாகவே இருப்பதால் அதை பற்றி சொல்ல எதுவுமில்லை ரஜினி ரசிகனாக ஒரு படத்தை தந்துள்ளார் . இரண்டாம் பாதியில் சில இடத்தில் அப்பா மகள் சென்டிமென்ட் கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகி இருக்கு ..!

படத்தின் பெரிய பிளஸ் ஸ்டண்ட்ஸ் ,ராம் லஷ்மணிண் பைட் மற்றும் கிளைமேக்ஸ் பீட்டர் ஹெயினின் பைட்ஸ் ரசிகர்களுக்கு செம விருந்து …!

கதை ,லாஜிக்லாம் பார்க்காமல் போனால் நல்ல என்ஜாய் பண்ணலாம் ஏன்னா இது முழுக்க முழுக்க ரஜினியின் மாஸ் சூப்பர் மாஸ் படம் …!

முடியாது என்றதை முடிச்சி காட்றதுதான் என் பழக்கம் சொல்லிட்டு பிட்னஸ் காட்ற சீன் தெறி மாஸ் ….!

ரஜினி தன் ரசிகர்களுக்கு தர விரும்பற ஒரு பக்கா மாஸ் கமர்ஷியல் படம் …!

Related posts

Second look of Viswasam movie is here!

Penbugs

Designer Saisha, previously Swapnil Shinde, comes out as transwoman

Penbugs

Santhanam launches late doctor Sethuraman’s clinic

Penbugs

மாஸாக வெளியான வக்கீல் சாப் டிரைலர்

Penbugs

I got the idea of 6 packs from Ajith: AR Murugadoss

Penbugs

மயில் | Mayil

Kesavan Madumathy

யுவனே சரணம்..!

Shiva Chelliah

Gulabo Sitabo [2020]: A tale of the Scrooges and the old mansion

Lakshmi Muthiah

Rajinikanth to feature in ‘Man vs Wild’ with Bear Grylls.

Penbugs

Assam-Bihar floods: Virat Kohli-Anushka Sharma pledge to help

Penbugs

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அஜித்

Kesavan Madumathy

Paravai Muniyamma passes away

Penbugs