Cinema Inspiring

என் அன்பான கேப்டனுக்கு…!

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்,

ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாங்க
அப்படி தான் அரசியல் களத்தில் முன்னும்
பின்னுமாக நஞ்சின் தீங்கு பரவப்பட்டு
தலைமையில் உள்ள அனைவரும்
விஷமாக இருப்பின் ஒருத்தர் மட்டும்
அங்கு கருப்புத்தங்கமாக காட்சி அளிக்கிறார்,

ஒரு குழந்தையோட சிரிப்புக்குள்ள
எவ்வளவு வெள்ளந்தி தெரியுமோ
அப்படி ஒரு வெள்ளந்தி மனசுக்கும்
சிரிப்புக்கும் சொந்தக்காரர்,

நடிப்புன்னு வந்துட்டாலும் சரி
அரசியல்ன்னு வந்துட்டாலும் சரி
இன்னொருத்தர் வயித்துல அடிச்சுட்டு
தான் முன்னேறணும்ன்னு ஒரு போதும்
நினைக்காத ஆளு,

கருப்பு – ன்றது ஒரு நிறம் தான்
அது திரையில தெரியுறப்போ
இவ்வளவு அழகா இருக்குமா என
தன் நடிப்பின் மூலம் எப்போதும் என்னை
வியக்க வைத்து கொண்டிருப்பவர்,

உடல்நிலை என்பது அவருக்கு சரியா
ஒத்துலைக்கலன்னு தான் சொல்லணும்,
மருந்துகளும் மாத்திரைகளும் அவரின்
உலகை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து
வீட்டுக்குள் முடங்க செய்தது,அவரின் முரசு
போல் முழங்கும் குரல்களை அவரிடம்
இருந்து நோய் எடுத்துக்கொண்டது,

கள்ளழகர் படத்துல அவர் நடிச்சதுல
இருந்து இப்போ வர எங்க ஊர் மதுரை
சித்திரை திருவிழால அந்த படத்தோட
வராரு வராரு அழகர் வராரு பாட்டு
இல்லாத நாளே கிடையாது,சோர்ந்து
போன ஒருத்தன கூட எந்திரிச்சு
ஆடவைக்கும் அந்த பாட்டு,இதுல
இன்னொரு விஷயம் என்னன்னா
படத்துல நடிச்ச இவரே எங்க ஊரு
தான்,அதனாலயோ என்னவோ எங்க
ஊர்க்காரங்களுக்கு எல்லாம் இவர் மேல
எப்பவும் ஒரு தனி மரியாதை இருக்கும்,

அதே நேரத்துல தவசி படத்துல வர
ஏழேழு இமயமலை பாடலும் ஒலிக்காத
சித்திரை திருவிழாவே இல்லை,
அந்த பாடல் ஒலித்தால் தான் கள்ளழகரே
ஆற்றில் இறங்கும் உட்சவம் நடக்கும்
என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அந்த
அளவு அந்த மண்ணுக்கு இவரின் பாடல்
மேல் அலாதி பிரியம்,

இல்ல என்பதையே
இல்லாம செஞ்சவரு
தென்பாண்டி தேரழகா
தெருமேல வாராரு,

அய்யா ஊர்வலத்தில்
ஆரத்தி எடுக்கத்தான்
ஆகாச சூரியனே ஆச படும் நீ பாரு,

மாணிக்க விநாயகம் அவரின் குரலில்
கவிஞர் பா.விஜய் எழுதிய இந்த வரிகள்
இவருக்காகவே எழுதப்பட்டது தான் போல்,

ஒரு தடவ எங்க வீட்டு பக்கம் வந்தாரு
ஒரு கல்யாணத்துக்கு நான் நான்காவது
படிக்கிறப்போ அப்போ அவருக்கு கை
கொடுத்தது இன்னும் ஞாபகமா இருக்கு,

” நல்லா படிங்க தம்பி ” – ன்னு சொல்லிட்டு
எனக்கு கை கொடுத்து என்ன பார்த்து
சிரிச்சுட்டு போன அந்த நிமிஷம் காலம்
கடந்து போனாலும் இன்னைக்கும்
நினைச்சு பார்க்கும் போது உறைந்து நிற்க
வைக்கிறது,

எத்தனையோ அழகான பாடல்
அவர் படத்துல இருந்தாலும்
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுன்னா
அது என் ஆசை மச்சான் படத்துல
இவர பார்த்து ரேவதி மேடம் பாடுற
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி
வச்சு பாட்டு தான், இந்த பாட்டுல வர
ஒரு வரி அவரை ரசிக்கும் ரசிகனுக்கு
ஒரு வரப்பிரசாதம்ன்னு சொல்லலாம்,

” ஊரு மெச்ச கை புடிச்ச ஒரே ஒரு உத்தமரு “

என் அப்பா அம்மா உயிருடன் இருந்த
போது இவர் படம் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பு ஆனால் அன்று எங்கள் வீட்டில்
கச்சேரின்னு சொல்லலாம் அவளோ
புடிக்கும் அம்மா அப்பா ரெண்டு பேருக்கும்
இவர,

அந்த தாக்கம் தான் என்னவோ
இன்னைக்கும் இவர் பெயர் போட்ட
ஒரு செய்திய கேட்க நேர்ந்தாலோ
அல்லது எங்காவது பார்க்க நேர்ந்தாலோ
அது மனசுக்கு அந்த நாள் முழுக்க நல்ல
நிறைவை தரும் அது நல்ல விஷயமாக
இருந்தால்,அவரின் உடல்நிலை பற்றிய
வதந்திகள் ஒரு பக்கம் வரும் போது மனசு
படுத்தும் பாடை வார்த்தைகளில் விவரிக்க
ஆகாது,

இங்க எத்தனை பேர் இப்படி
இருப்பாங்கன்னு எனக்கு தெரியல
தன்னால முடிஞ்ச வரை முடியாது என்று
சொல்லிவிடாமல் இன்னொருவருக்கு
உதவும் மனம் இருந்ததினால் தான்
இன்றும் அவர் பாமர மக்களிடையே
குழந்தையாகவும் பெரியோர்கள் மத்தியில்
அவர்கள் ரத்த வழியில் வந்த தலைமகன்
போல் இன்றும் நிலைத்து நிற்கிறார்
மக்களின் மனதில்,

நடிப்பிலும் சரி அரசியலிலும் சரி
அன்றாட நிஜ வாழ்க்கையிலும் சரி
தன் சுயநலத்துக்காக யாரையும்
மோசம் செய்ததும் இல்லை,யாருக்கும்
தீங்கு நினைத்ததும் இல்லை,

பணம்,பெயர்,புகழ்,வசதி வாய்ப்பு,
ஜாதி,இனம்,மதம்,மொழி,ஏற்றத்தாழ்வு,
பிரிவினை இதற்கெல்லாம் சற்று
அப்பாற்பட்டவர் என்றே சொல்லுவேன்,

தப்புன்னு தெரிஞ்சா அங்க தன்னோட
குரலா உயர்த்தாத இடமும் இல்ல அதே
நேரத்துல மனசுல இருந்து அன்பை
பொழிஞ்சு ஒருத்தர தூக்கிவிடாமையும்
இருந்ததில்ல,

சிங்கம் என்ன தான் காட்டுக்கு ராஜாவா
இருந்தாலும் அதன் வயது கூடிக்கொண்டு
செல்லும் போது ஒரு இடத்தில் முடங்கி
உட்கார்ந்து விடுமாம் அப்படி தான் இவரும்,

மீண்டும் உங்கள் கர்ஜனை மிக்க
குரல்களை நாங்கள் கேட்க வேண்டும் என்ற
ஆவலுடன் உள்ளோம்,கள்ளங்ககபடமில்லா
உங்களின் சிரிப்பை பார்க்க ஒரு கூட்டமே
காத்திருக்கிறது,

அதே நேரத்தில் மீண்டும் அரசியல்
வரவில்லை என்றாலும் சரி உடல்நலம்
மிக்க ஆரோக்கிய வாழ்வு உங்களுக்கு
அமைந்தாலே கோடி புண்ணியம் என
நினைக்கும் உள்ளங்களில் நானும்
ஒருவன்,

இப்போ உங்களுக்கு புரியும்
நினைக்குறேன் நான் என்
ஆர்டிக்கல் ஆரம்பித்த முதலில்,

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் – என்று
எதற்காக எழுதி இருந்தேன் என்று,

தெய்வம் தகுந்த நேரம் காலம்
பார்த்து மனிதர் செய்த பாவங்களுக்கு
பாவக்கணக்கு கொடுப்பவன்,அரசன்
நேர்மை தவறும் இடத்தில் அப்போதே
தன்னுடைய அரசாணை கட்டளையின்
படி தப்புன்னா தப்பு சரின்னா சரி – ன்னு
அவர் செய்த தவறின் தீர்ப்பை அந்த
இடத்திலேயே வழங்குவான்,

இவர் சிறந்த அரசன்
இவர் கட்டளையிடுபவர்
இவர் அன்பை விதைப்பவர்,

*
அரசன் எங்கிருந்தாலும் அரசனே..!!

HappyBirthdayMyCaptain | #PureFanBoyArticle ❤️

Related posts

என் பிரியமான ப்ரித்விக்கு

Shiva Chelliah

Ashwin Vinayagamoorthy about his life, music and #MeToo

Penbugs

ECB announce Rachael Heyhoe-Flint trophy

Penbugs

மகாமுனி..!

Kesavan Madumathy

Dear Roger Federer…

Penbugs

Vera Level Sago from Ayalaan | Sivakarthikeyan | Rakul Preet Singh | AR Rahman

Penbugs

தாரக மங்கைகள்..!

Shiva Chelliah

Jonita Gandhi turns actor | Vignesh Shivn | Krishnakumar

Penbugs

“பெண்குயின்” – திரை விமர்சனம் ‌…!

Kesavan Madumathy

Fans can enter the taping of Friends reunion special, here’s how!

Penbugs

Official: ‘How I Met Your Mother’ Sequel Series ordered at Hulu

Penbugs

Vijayalakshmi attempts suicide, admitted in hospital

Penbugs

Leave a Comment