Cricket Men Cricket

எழுந்து வா எம் வீரனே!!

டெஸ்ட் கிரிக்கெட்ல ஓப்பனிங் ஸ்லாட் வாய்ப்புன்றது குதிரை கொம்பு மாதிரி இந்திய அணிய பொறுத்தவரைக்கும்,

முரளி விஜய்,கே.எல்.ராகுல்,மயங்க் அகர்வால்,சுப்மன் கில் – ன்னு இந்த இடத்துக்கு போட்டி அதிகம்,ஆல்ரெடி T20 மற்றும் ODI – ல தவான் – ரோஹித் கூட்டணி சிறப்பா இருக்கனால டெஸ்ட்ல அவங்கள பெருசா யூஸ் பண்ணல கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாம்னு,ஆனா இங்க போற போக்க பார்த்தா கடைசில வார்னர் மாதிரி மூணு பிளாட்ஃபார்ம் மேட்ச்லயும் இனி இவங்க தான் ஆட வரணும் போல,

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் இன்னக்கி ஆரம்பிச்சு போய்கிட்டு இருக்க நேரத்துல நேத்து Playing XI Squad அறிவிச்சதுல இருந்து சரமாரி ட்ரோல் மீம்ஸ்கள் நெட்டிசன்களிடம் இருந்து,

Playing XI – இல் ஏன் ராகுல் இல்லை,ரிஷப் பேண்ட் இல்லை,கில் இல்லை என்று,இதில் ட்ரோல் கன்டென்ட்டாக நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்டவர் ப்ரித்வி ஷா மட்டுமே,

“He (Shaw) is born to play cricket. He’s been playing since the age of eight in the maidans of Mumbai. You can see all that hardwork showing. He’s a spectator’s delight. There’s a bit of Sachin there, a bit of Viru in him and when he walks — there’s a bit of Lara as well,”

Ravi Shashtri | Indian Head Coach | The Cricket Lounge

மேலே ரவி சாஸ்திரி சொன்ன இந்த வரிகள் தான் ப்ரித்வியை ட்ரோல் மெட்டீரியலாக இங்கு மாற்றி இருக்கிறது,

முதலில் ஒரு விஷயம் இங்கு யோசிக்க வேண்டும்,ரவி சாஸ்திரி நல்ல வர்ணனையாளர் என்பது நம் எல்லோரும் நன்கு அறிவோம்,2011 உலககோப்பை இறுதி ஆட்டத்தில் தோனி அடித்த கடைசி சிக்ஸரின் போது ரவி சாஸ்திரி அவர்களின் வர்ணனை இன்று வரை ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனதிலும் ஒரு தடமாக பதிந்திருக்கும்,அதுவும் தூங்கிட்டு இருக்க தோனி ஃபேன்ஸ் கிட்ட எழுப்பி கேட்டாலும் அச்சு பிசுராம சொல்லுவாங்க,அப்படி ஒரு சிறந்த வர்ணனையாளர் ரவி சாஸ்திரி,

அவர் ப்ரித்வி பற்றிய ஒரு தகவலை மீடியாவுக்கு சொல்கிறார் என்றால் நிச்சயமாக அந்த நபர் அதற்கு தகுதியானவராக இருப்பார்,அதில் எந்த வித ஐயமும் சந்தேகமும் வேண்டாம் யாருக்கும்,குட்டி சச்சின் என்று ப்ரித்வியை அழைப்போரும் உண்டு,

சேவாக் மாதிரி ஒரு Aggressive Start தான் ப்ரித்வியும் ஆடுறார்,ஆனா அவரோட வீக்னஸ் தான் இங்க பிரச்சனையே நமக்கு,
இன்கம்மிங் டெலிவரி மற்றும் ஷார்ட் பால்ஸ் இரண்டும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது ப்ரித்வியை பொறுத்தவரையில்,இதை தங்களது சாதகமாக பயன்படுத்தி கொண்டு பௌலர்ஸ் இவர் விக்கெட்டை எளிதாக வீழ்த்துகின்றனர்,இது தான் பிரச்சனையே தவிர ட்ரோல் மெட்டீரியல் செய்யும் அளவிற்கு ப்ரித்வி ஒன்னும் பந்தயம் அடிக்காத டம்மி பொய் கால் குதிரை இல்லை,

சில வருடங்களுக்கு முன்பு கே.எல்.ராகுலிற்க்கும் இது போன்ற Bad சீசன் வந்த போது மீடியாவில் அவர் Poor Form பற்றிய கேளியும் கிண்டலும் அதிகமாக செய்யப்பட்ட போது ராகுல் செய்தது ஒன்று தான்,தன் குருவான இந்திய பெருஞ்சுவர் டிராவிட் அவர்களிடம் சென்று தன் தவறுகளை சரி செய்து மீண்டும் அணியில் இடம்பிடித்து பௌலர்களை பந்தாடினார், இங்கு ப்ரித்வியின் ஆஸ்த்தான குருவும் ராகுல் டிராவிட் சார் தான் என்பது நாம் அறிந்ததே, ராகுலை போல் ப்ரித்வியும் தன் குருவின் ஆசியோடு தவறுகளில் இருந்து மீண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,

அப்பறம் இன்னொரு விஷயம் இங்க ப்ரித்வி சீக்கிரமா அவுட் ஆகிட்டா ” எனக்கு பசிக்கும்ல நானும் சாப்பிடணும்ல ” – ன்னு ஐ.பி.எல் மேட்ச்ல அவர் அவுட் ஆகி பெவிலியன் போய் சாப்ட்ட ஃபுட்டேஜ் வச்சு அவர கிண்டல் செய்யுறாங்க சில பேர்,

வயிறு பசிச்சா வாய் திங்கும்
அது மனுஷன் மிருகம்ன்னு
எல்லாருக்கும் ஒரே மாதிரி தான்,

எது எப்படியோ ஆனா இப்படி தோத்து போன மாதிரி உட்கார்ந்து இருப்பன்னு நாங்க நினைக்கவே இல்ல மாறா,

தவறுகளை சரி செய்து
தடம் பதிக்க வா எங்கள் வீரனே..!!!

Related posts

Chetan Sakariya’s father dies of COVID19

Penbugs

Just in: Sunil Joshi appointed as senior men’s selection committee Chairman

Gomesh Shanmugavelayutham

Mustafizur of Tamilnadu

Shiva Chelliah

Why Pollard is special?

Penbugs

Why Women cricket is not popular in India

Penbugs

Forever Favourite: Charlotte Edwards

Penbugs

Watch: David Warner dances for Butta Bomma

Penbugs

This is not first time Pollard has six sixes in an over

Penbugs

Thisara Perera retires from international cricket

Penbugs

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் – நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

Penbugs

Neetu David appointed as head of India women’s selection committee

Penbugs

Women’s Super League | Match 3 | CON vs STL | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Leave a Comment