Cricket IPL Men Cricket

மோதி விளையாடு – ஐபிஎல் 2021

கோடைக்காலத்தில் ஒரு வசந்த காலம்,வானவில் வர்ணங்கள் தோரணம் கட்டி விளையாடும் வண்ணமிகு திருவிழா..!!

ஓடி ரன் எடுத்து விளையாடிய காலம் போய் நின்ற இடத்தில் இருந்து சிக்ஸரும் பௌண்டரிகளும் விளாசிடும்
கண் கட்டு வித்தைகள் காண காத்திருக்கும் ரசிகர் கூட்டம்..!!

பந்து வீச்சில் யார்க்கர் கூக்லி
இன் ஸ்விங் அவுட் ஸ்விங்
கேரம் பால் நக்குல் பால் என
இன்னும் இன்னும் புத்தம் புதிய வித்தைகளை தங்கள் கைகளில் ஒளித்து வைத்திருக்கும் பௌலர்கள் ஆச்சர்யங்களின் சிகரங்கள்.

பௌண்ட்ரி லைனில் அற்புத கேட்ச் அசத்தல் ஃபீல்டிங் செய்து ரன் அவுட் செய்யும் அசால்ட் ஜாம்பவான்கள் அணிவகுப்பு மெய் சிலிர்க்க வைக்கும்.

சொடக்கு போடும் நேரத்தில்
அவுட் செய்யும் கீப்பர்களின் சூப்பர் திறமை, தலைக்கு மேல் செல்லும் பந்தை அப்படியே சிக்ஸருக்கு அனுப்பும் சூப்பர் மேன்களின் கை வண்ணம் அத்தனையும் மேஜிக்.

ரிவர்ஸ் ஸ்வீப் கில்லிகள் நிறைந்த
சுல்லான்கள் இப்போதெல்லாம் சாதாரணமாக காண முடிகிறது அதுவும் IPL என்றால் அவர்களுக்கு அல்வா மாதிரி.

களத்தில் செல்ல சண்டைகள், சீண்டல்கள், ட்ரெஸ்சீங் ரூம் கிண்டல்கள்
சிரித்து மகிழ மனதில் இடம் பிடிக்கும் சேட்டைகள்
மீம் கிரியேட்டர்களுக்கு பந்தி வைக்கும் நிகழ்வுகள் என இன்னும் ஏராளமான தாராளமான
ஒரு புத்துணர்ச்சிக்கு தயாராக இருக்கிறோம்.

கொரனா கொடுத்த துன்பங்களை
மறந்து அது கற்றுக்கொடுத்த பாடங்களை மனதில் கொண்டு
வருகின்ற IPL வரவேற்று கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.

இந்தியாவில் கிரிக்கெட் எப்போதும் ஒரு திருவிழா அதில் IPL ரங்கோலி.

வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு
என்பதை விட ஆகச்சிறந்த பொழுது போக்கு என்பதை மனதில் கொண்டு..
ஓடி விளையாடலாம்
கொஞ்சம் மோதி விளையாடலாம்!!!

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை நாளை வெளியீடு

Penbugs

BAA vs CRC, Match 29, ECS Austria-Vienna-2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

IPL, CSK vs SRH, Match 23: CSK win by 7 wickets

Penbugs

Mithali Raj on secret of her consistency

Penbugs

England players to return to training from June 22

Penbugs

Qualifier 1: CSK v MI | Preview

Penbugs

Odisha T20 League | ODC vs OPU | Match 12 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Kohli rested for last 2 ODIs, T20Is in New Zealand; Rohit to lead

Penbugs

Hanuma Vihari reveals what his mentor Dravid told him after SCG draw

Penbugs

HIS vs BAR, Match 77, ECST10-Barcelona 2021, Playing XI, Pitch report, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

IPL 2020: Mitchell Starc opt-out, Maxwell available for auction

Gomesh Shanmugavelayutham

Mumbai Indians sign Beuran Hendricks as the replacement of injured Alzarri Joseph

Penbugs

Leave a Comment