Coronavirus

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவோர் விகிதம் 77.77 சதவீதம் – மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவோர் விகிதம் 77.77 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 74,894 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை மொத்தம் 33,98,844 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைவோர் விகிதம் 77.77 சதவிகிதமாக இருக்கிறது.

சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்தம் எண்ணிக்கையில் 61 சதவிகிதத்தினர் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

தற்போது இந்தியாவில் 8,97,394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 2,40,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 1,115 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73,890 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் உயிரிழப்பு 1.69 சதவீதமாக குறைந்துள்ளது

Related posts

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

Kesavan Madumathy

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

COVID-19: India’s recovery rate crosses 92%

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,737 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5222 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Penbugs

‘What if a player tests positive?’ Dravid questions Bio bubble plans

Penbugs

PCB conducts COVID19 tests once again, 6 out of 10 cricketers tests negative!

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

Leave a Comment