தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 85,350 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் இன்று புதிதாக 2,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 79,473 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 1,270 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
இதனால், வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 733 ஆக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவா்களில் இன்று 11 போ் உயிரிழந்துள்ளனா். இதனால், கொரோனா உயிரிழப்பு 12,670 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 13,070 போ் சிகிச்சையில் உள்ளனா்.
