Cinema

என்றும் ஸ்பெஷல், ஹாரிஸ் ஜெயராஜ்…!

பாடல் வரியை தெளிவா கேட்க வைக்கிறது ஒரு கலை அந்த வகையில் ஹாரிஸ் எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல் …!

ஹாரிஸ்னாலே எனக்கு மனசுல வர்றது சாமுராய்ல வர்ற‌ புல்லாங்குழல் இசை. அந்த ரிங்டோன் திரும்பற பக்கமெல்லாம் கேட்ட‌ காலம் உண்டு ..!

அதேதான் ஓ மேடி ஓ மேடி‌ ரிங்கடோன், சுட்டும் விழிச்சுடரே ரிங் டோன் , முதல் மழை அழைத்தது ரிங்டோன் ,அன்பே என் அன்பே ரிங்டோன் …!

ஒரு ஆல்பத்துல ஒரு‌ பாட்டு ஹிட் ஆனாலே அது பெரிய‌ விசயம் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவும் ஆனா நம்ம ஹாரிஸ் அடிச்சா ஆறு பாடலும் சிக்ஸர்தான் எல்லா ஆல்பமும் எல்லா பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்தான் ..!

மின்னலே
12B
தாம்தூம்
வாரணம் ‌ஆயிரம்
எங்கேயும் காதல்
இரண்டாம் உலகம்
என்னை அறிந்தால்
நண்பன்
காக்க காக்க
வேட்டையாடு விளையாடு
உள்ளம் கேட்குமே
அயன்
கோ
மஜ்னு
தொட்டி ஜெயா
துப்பாக்கி
உன்னாலே உன்னாலே
லேசா லேசா
கஜினி
பீமா
சாமி
துப்பாக்கி

இது இல்லாம சில படங்கள் விட்டு போய்‌ இருக்கலாம் இவ்ளோ ஆல்பத்தை பத்தி பேசனும்னா பேசிட்டே போகலாம் ..!

ஓ மகசியா வும் ஹிட்டாகும் , அனல் மேலே பனித்துளியும் ஹிட்டாகும் அதுதான் அவரின் திறமை ..!

காதல் தோல்வியா – அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை
வாழ்க்கையே தோல்வியா – ஓ மனமே ஓ மனமே
இறங்கி குத்தனுமா – டங்கமாரி ஊதாரி
காதலிக்க வைக்கனுமா – எங்கேயும் காதல்
மாஸா பிஜிஎம் வேணுமா – வேட்டையாடு விளையாடு , துப்பாக்கி ,என்னை அறிந்தால்

இப்படி பல தரப்பினரையும் தனது இசையால் மூழ்கடித்துள்ளார் .

ஹாரிஸ் – கௌதம்
ஹாரிஸ் – தாமரை
ஹாரிஸ் – வாலி
ஹாரிஸ் – சூர்யா

இந்த காம்போ ரொம்பவே ஸ்பெஷல் …!

இப்ப கொஞ்சம் சறுக்கல்களை சந்தித்தாலும் அவர்‌ மீண்டும் வரனும் என எதிர்பார்க்கிற ரசிகர்களில் நானும் ஒருவன் …!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹாரிஸ் ஜெயராஜ் ..!

Related posts

Shakuntala Devi (2020) :A not-so-perfect homage to the free-spirited Shakuntala Devi from Bollywood

Lakshmi Muthiah

வித்யாசாகர் ஒரு வித்தைக்காரன்..!

Penbugs

He showed what I’m to me: Rajinikanth about Balachander

Penbugs

COVID19: Ajith donates Rs 1.25 Crores

Penbugs

Bigil to release on Diwali

Penbugs

Recent: Darbar audio launch date released

Penbugs

Vikram gets emotional after Dhruv’s Adithya Varma release

Penbugs

To epitome of uniqueness- Happy Birthday Samantha

Penbugs

பிறந்தநாள் வாழ்த்துகள் அனுராக் காஷ்யப்!

Penbugs

Life Lessons and Motivation from Vishnu Vishal

Penbugs

Michael Tamil Short Film[2020]: A poignant story that treads on hope

Lakshmi Muthiah

Arav’s Market Raja MBBS| Saran | Review

Penbugs