Cinema

“இந்தியன்ஸ் ஆர் ஆல்வேஸ் எமோஷ்னல் இடியட்ஸ்…”

“இந்தியன்ஸ் ஆர் ஆல்வேஸ் எமோஷ்னல் இடியட்” என்ற சொல்லாடல் நிறைய இடத்துல குறிப்பிடுவாங்க அதற்கான காரணம் காலம் காலமா ஏதோ ஒரு வகையில் இந்த எமோசனும் நம்ம கூடவே வந்துட்டு இருக்கும் …!

தனிக்குடித்தனம் பெருகி போன இந்த காலக்கட்டத்தில் கூட்டு குடும்பத்தின் அருமை பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை ..!

எப்பொழுதுமே திரையில் நம்மை எது வியக்க வைக்கும் விசயம் என்ன என்றால் நம்மால் நிஜ வாழ்க்கையில் எது செய்ய முடியாதோ அது திரையில் வந்தால் நாம ஓவர் எக்ஸைட்மெண்ட் ஆகி ரசிக்கஸ தொடங்கிடுவோம்..!

தொண்ணூறுகளில் ஆக்சன் படங்களுக்கான வரவேற்பு போலதான் இப்ப குடும்ப படங்களுக்கு இருக்கிற வரவேற்பு ஏன்னா இப்ப கூட்டு குடும்பம்னா அது திரையில் மட்டும்தான் நம்மால் பாக்க முடியும்…!

வெறும் அம்மாவின் முகத்தையும் , அப்பா முகத்தையும் டிவியில் ஆங்கில குழந்தை பாடல்களையும் பார்த்து வளரும் நகர குழந்தைகள் தாத்தா ,பாட்டி, சித்தப்பா , சித்தி , பெரியம்மா , பெரியப்பா ,அத்தை ,மாமா என்ற உறவுகளுடான பிணைப்பே இல்லாமல் வெறும் இயந்திரங்களுடான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பது வருத்தமான ஒன்று…!

கடைக்குட்டி சிங்கம் படம் வழக்கம்போல வரும் ஒரு சாதாரண கமர்ஷியல் படம்தான் ஆனால் அதில் பாண்டியராஜ் சொல்லிய விதம் கூட்டு குடும்பத்தில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் , சின்ன சின்ன ஈகோ சண்டைகள் , மூன்றாம் நபர்களின் தலையீடுகளால் வரும் சண்டைகள் என அழகாக படம் பிடித்து காட்டி இருப்பார் அதுவும் கோவிலில் நடைபெறும் ஒரு உரையாடல் உணர்ச்சிகளின் குவியல்…!

கார்த்தி பேசிட்டு இருக்கும்போது ரெண்டாவது மாமா போன் வில்லன் கேக்கற மாதிரி ஆன்ல இருக்கும் அப்ப அவர் அதை கட் பண்ற சீன் செமையா எடுத்து இருப்பார், அம்மா செஞ்சதை சொல்லி காட்டாதா அதுக்கு செய்யாம இருந்து இருக்கலாம் என்று கார்த்தி சொல்லும்போது நியாபக படுத்தேறன்டா அவ்ளோதான் சொல்ற வசனம் , அவன் உங்க எல்லாரையும் சந்தோசப்பட்டு பாக்க நினைச்சான் நீங்க அவனை அழ வைச்சி பாத்துட்டீங்க என்ற வசனங்கள் எல்லாம் டாப் கிளாஸ்…!

விஜய் டிவி இந்த படத்தை வாங்கினது கூட ஒரு வகையில் நல்லதுதான் அப்ப அப்ப பார்த்து யார்னா அவங்க குடும்பத்தை மிஸ் பண்ணி பீல் பண்ணா கூட அது பாண்டியராஜின் வெற்றிதான்..!

இங்க எல்லாமே மாறலாம் ஆனாலும் காலம் காலமா மாறாம இருக்கிறது நம்முடைய அந்த குடும்ப எமோசன்ஸ்தான் முடிஞ்சவரை நம்முடைய உற்றார் உறவினர்களோடு சேர்ந்து சந்தோசமா இருக்க முயற்சிப்போம் ..!

Related posts

There was not enough representation: David Schwimmer on Friends cast

Penbugs

மாஸாக வெளியான வக்கீல் சாப் டிரைலர்

Penbugs

Watch: Joaquin Phoenix calls out racism in BAFTAs 2020 speech

Penbugs

எஸ்.பி பாலசுப்ரமணியம் பற்றி நடிகர் சிம்பு மிக உருக்கமான அறிக்கை வெளியீடு!

Kesavan Madumathy

அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார்

Anjali Raga Jammy

I got the idea of 6 packs from Ajith: AR Murugadoss

Penbugs

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

Kangana Ranaut tested positive for coronavirus

Penbugs

Happy Birthday, Rahul!

Penbugs

சில்லுக்கருப்பட்டி பட இயக்குநரை பாராட்டிய சாய் பல்லவி!

Penbugs

விண்ணைத்தாண்டி வருவாயா..!

Penbugs

SAG Awards 2020: The Complete Winners List

Penbugs