மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.
கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
இந்த படம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கி உள்ளார்.
இப்படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் இயக்கும் படத்தில் அனிருத் இசையமைக்கிறார் .
இந்த படத்திற்கு ‘எவனென்று நினைத்தாய்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Pakistan tour of New Zealand | 2nd T20I | NZ vs PAK | Dream 11 Prediction | Fantasy Cricket Tips