பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றார்.
அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ர, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா, தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மானு பாகேர் ஆகியோர் உள்பட 27 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.



Pakistan tour of New Zealand | 2nd T20I | NZ vs PAK | Dream 11 Prediction | Fantasy Cricket Tips