கொரோனா அச்சுறுத்தலை அடுத்து நாளைமுதல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வரத் தேவையில்லை எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளைமுதல் அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டும் சுழற்சி முறையில் வரவேண்டும் எனத் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாளைமுதல் 20ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

