குறும் படங்களின் வளர்ச்சியும் , அதன் தாக்கமும் தற்போது தவிர்க்க இயலாத ஒன்று பெரும்பான்மையான இளம் தலைமுறையினர் தங்கள் கருத்துக்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல இதை ஒரு கருவியாக பயன்படுத்த துவங்கியுள்ளனர்..!
மைக்கேல் கதையின் நாயகன் ஒரு ரௌடியால் கடத்தப்படுகிறான் அங்கு ஏற்கனவே ஒரு பெண் சிறைப்படுத்தபட்டு இருக்கிறாள் , அவன் அவளை காப்பாற்றுகிறானா அவளின் கதை என்ன என்பதுதான் கதை…!
புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களின் வலியை எத்தனை படங்கள் சொல்லி இருக்கின்றன என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம் இந்த கதை அவர்களின் வலியை பதிவு செய்ய முயற்சித்துள்ளது .
படத்தின் வசனங்கள் சில இடங்களில் நன்றாக கவனிக்கப்படுகிறது .
1.நீங்க டிராபிக்கான ரோட்டுல போகதான் கஷ்டபடுவீங்க நாங்க ரோட்டுல போகவே கஷ்டப்படனும் .
2 . நீங்க கூட இலங்கை தமிழர்னுதான முதலிலயே கை வைச்சீங்க இதே வேற யார்னா இருந்தா இப்படி நடந்துப்பிங்களா ..?
3.சின்னவங்களா இருந்தா அடிச்சிடலாம்
4.அகதி முகாமில் ஐநூறு பேர் ஒரு பாத்ரூம் பயன்படுத்தி இருக்கீங்களா ..?
5.முப்பது வருசம் இங்க இருக்கிறவங்களுக்கு ஓட்டுரிமை கூட தாராத நாடுதான் இது ..!
6.போலிஸ்க்கு கேஸ் எதுவும் கிடைக்கலனா முதலில் போற இடமே அகதிகள் முகாம்தான் ….!
இந்த மாதிரியான வசனங்கள் இலங்கை வாழ் அகதிகளின் வலியையும் , இந்திய அரசின் மீதான ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறது .
Toxic environment: The Ellen Show is under investigation