நமக்கு பிடித்த படம் எண்டாலும் விமர்சனம் நேர்மையாக இருக்க வேண்டும்.அதை நம்பியே எழுதுகிறேன் பிழைஇருந்தால் மன்னிக்கவும்!
சாதாரண கதையமைப்பாய் தொடங்கிறது!! தமிழ் சினமாவிற்கே உண்டான மாறாப் படிவுருடன் வில்லன்!
குடிபழக்கத்திற்கு அடிமையாய்! வைச சொல் இயல்பாக பயன்படுத்தும் ஒருவனாய்! கருந்தோல் உடையாவனாய்!!
தமிழின் வட்டார வழக்கு இங்கு பெரும் அளவில் பயன்படுத்தப்பட்ட இருக்கிறது!
அதிலும் சென்னை வட்டார வழுக்குகளை எப்போதும் கெட்டவர்கே கொடுத்த தமிழ் சினிமா அல்லவா! அதன் பிரதிபலிப்பே அவை!
ஒரு நல்ல படம் மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் . என்னுள் ஏற்கனவே சில மாயா வடுவை மீண்டும் தீண்டியது இப்படம்!
ஈழம் சார்ந்த பின்புலன் எனக்கு இருப்பதால் கூட அவை இருக்கலாம்!
இயல்பான கதை படிவம்,
ஈழத்தில் இருந்து சட்டப்படியிராத தமிழகம் வந்த பெட்டையள் , ஒரு காடையனால் கடத்தபட்டு அங்கு வைக்கபட்டு இருப்பாள்! அங்கு தான் அவளை முதல் முதலில் பார்கிறான்… பிறகு இருவரும் அறிமுகமாக! அவளை அங்கிருந்து காப்பாற்றி உதவி செய்கிறான்..
கதாநாயகன் ஒரு தேசாந்திரி..மக்களை இசையின் மூலம் இணைக்க முடியும் என்று திடமாக நம்பும் ஓர் கலைஞன்.
தமிழக இளைஞர்கள் சிலருக்கு உரித்தான சமூக கண்ணோட்டம் தான் நாயகனுக்கும்! ஈழம் பற்றி அவர் புரிதலில் உரையாடல் தொடங்குகிறது ..”இப்போது தான் போர் முடிவடைந்து எல்லாம் சரியாகி விட்டது நீங்க ஏன் உங்க நாட்டு போகக்கூடாது”
அவளோ மனதளவில் ஏற்பட்ட வடுகள் அழியாமல், எல்லாம் இழந்து ஏதிலியாய் தமிழகம் வந்து மீண்டும் நீங்க பெருந்துயரம் அடைந்து ! இந்த கேள்வியினை மிகவும் பக்குவமாக எடுத்துரைக்க!
அவளின் நெடுஞ்சாலை பயம் பற்றி விவரிக்கிறாள் , நெடுஞ்சாலை மற்றும் முகாம் எல்லாம் உளவியல் பயம் தான்! A9 நெடுஞ்சாலை கண்டியில் துடங்கி யாழில் முடியும் .பொதுவாக கண்டி வீதி என்றே அழைக்கப்படும்.. சொந்த நாட்டில் உரிமைகள் பறிக்கப்பட்டு உயிரை காப்பாற்ற மிதிவெடிகள் உள்ள சாலையில் நடந்த வலிகள் தான் அவை!!
குரும்படத்தின் முடிவுரையில் இந்திய ஒன்றியமும் மாநில அரசும் ஈழத்தமிழர் மீது நடத்தும் அநீதி பற்றியான உரையாடல் !மற்ற நாடுகளில் ஏதிலியாய் சென்ற எம்மக்களுக்கு குடியுரிமை தந்து உதவின ஆனால் நம் மாநில அரசோ! ஒரே மொழி பகிர்ந்து கொள்ளும் தொப்புள் கொடி உறவுகளை திறந்தவெளி சிறைச்சாலையில் அடைத்து துன்புறுத்தி வருகிறது!
இந்த குரும்படம் இன அழிப்பு நினைவு மாதத்தில் வெளியிடப்பட்டது வரவேற்கத்தக்கது !
தமிழகத்தில் இருக்கும் மக்கள் பலர் இனஅழிப்பு மற்றும் ஈழபோர் அத எதோ வேறநாட்டில் நடந்த போர் எண்டும் அதனை பொருட்படுத்தாமல் இருக்கின்றன! உலகத்தில் நடந்த அனைத்து இன அழிப்பும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தான் ! தன் சமமான சுதந்திரத்தை பெற குருதி சிந்திய மக்களை நாம் என்றும் நினைவு கூறவேண்டும்…
இப்படம் தந்த மைக்கேல் குழுவினருக்கு நன்றி!
Review by: Dinesh!
Hrithik-Kangana case to be investigated by Crime Branch