Cinema

நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக வேண்டிய நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் தற்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை அப்போது ஏற்படுத்தியது.

இந்நிலையில்
படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

”உங்கள் பொறுமைக்கு நன்றி. நெஞ்சம் மறப்பதில்லை படம் மார்ச் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது வேற விளையாட்டு” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருந்த இந்தப் படம் வெளியாவது, செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

England tour of India: Schedule, venue, match date

Penbugs

In Pictures: Rajinikanth and Darbar team at Telugu Pre-Release Function

Anjali Raga Jammy

Sonu Sood helps Suresh Raina by arranging oxygen cylinder for his aunt

Penbugs

Seeru review: Known commercial plot yet entertaining

Penbugs

எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

Penbugs

Simbu will come regularly for the shoot from now on, assures Simbu’s mom!

Penbugs

“பெண்குயின்” – திரை விமர்சனம் ‌…!

Kesavan Madumathy

Vadivelu responds to Nesamani trend, says he has no idea about it!

Penbugs

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

COVID19: Sussanne temporarily moves in with Hrithik to co-parent sons

Penbugs

1st look of Tughlaq Darbar is here!

Penbugs

Cobra’s 1st single, Thumbi Thullal to release on 29th June

Penbugs

Leave a Comment